பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

அப்பாத்துரையம் – 37

இக்கணையாழி உண்மையில் ஆர்ஸினோ அனுப்பிய தன்று. ஒலிவியாவினுடையதே பணிப்பெண்ணுக்குத்

தெரியாதபடி அவள் இதன்மூலம் தன் காதலை வயோலாவுக்குக் குறிப்பாக அறிவித்ததேயன்றி வேறன்று. தான் விடை கொள்ளும்போதே ஒலிவியாவின் உள்ள நிலையை உன்னிப்பாய் அறிந்த வயோலாவுக்கு இப்போது அவ்வெண்ணம் உறுதியா யிற்று. அந்தோ! என் மாற்றுருவால் விளைந்த தீவினைகள்தாம் என்னே! ஒருபுறம் ஆணுருவில் என் காதலை ஆர்ஸினோ அறியவில்லை. இன்னொரு புறம் அவ்வுருவை உண்மை என்று மயங்கி ஏழை ஒலிவியா இம்மாய உருமீது காதல் கொண்டு விட்டாள்! எனக்காவது ஒருபோக்கு உண்டு. பெண்ணைக் காதலித்த பெண்ணே, உன்நிலை யாதோ? என அவள்

எண்ணமிடலானாள்.

ஆர்ஸினோ ஒலிவியாவின் மொழிகேட்டு மனம் உளைந்தான்; ஆனால், காதலால் கனிவுற்ற உள்ளம் முறிவு பெறாது, பன்னிப் பன்னி மீண்டும் வயோலாவை அவளிடம் அனுப்பவே எண்ணங் கொண்டது. அரசர்க்குரிய போரும் வேட்டையும் நீத்து அவன் ஒலிவியாவின் பெயரிலும், காதற்பாட்டுக்களிலுமே பொழுதைப் போக்கி வந்தான். பாணர் அவன் பக்கமிருந்து ஓயாது யாழ் மீட்டி அத்தகைய பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடி அரசனைச் சுற்றிலும் காதற் புகையும், துயரப் புகையும் பரப்பி வந்தனர்.

1. வருதி, வருதி, மறலி! நீ

பாட்டு

வந்து பைம்பணை ஏற்றியே அரிதின் எனைக்கொ டேகுவாய்! அணங்கி னாலுளம் நைந்துளேன்; விரிது கில்கவித் தோலையும் வேய்ந்திடாய்! எரி காய்ந்திடாய்! நரிகள் சூழ்சுடு காடென்போல்

நயந்து ளார்எவர்? தோய்ந்திடாய்!