பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

202 || ஒலிவியா வயோலா வரவை எதிர்பார்ப்பதை அவள் பணிப்பெண்களும் பணியாட்களும் எளிதில் அறிந்து கொண்டனர். ஆகவே, அவள் மறுமுறை வந்தபோது அவர்கள் அவளைத் தடையின்றி வரவேற்று உள் அனுப்பினர். ஆனால், வயோலா ஆர்ஸினோவின் பேச்செடுத்ததும் ஒலிவியா அவள் பேச்சை இடைமறித்து, “அவர் காதலுக்காகப் பரிந்து பேசுவதில் பயனில்லை என்றுதான் முன்னமே கூறிவிட்டேனே. அதை விடுத்து நான் கனவு கண்டுகொண்டிருக்கும் காதலின் பேச்சையெடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்று நயந்து கூறினாள். வயோலா அக்குறிப்பையறிந்தும் அறியாதவள் போலிருக்கவே அவள் நாண் துறந்து நேரடியாகவே வயோலாவின் காதலை வேண்டி, அவள் நாடியைத் தாங்கலானாள். இதற்கு இன்னும் இடங்கொடுத்தால் தன் நிலை கெட்டுவிடும் என்று கண்டு வயோலா அங்கே நின்றும் விரைந்து வெளியேறத் தொடங்கினாள்.

ஒலிவியாவின் பழங்காதலருள் ஸர் ஆன்ட்ரூ ஏக்ச்சீக் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் உயர்குடியுட் பிறந்தவனாயினும் அறிவற்றவன்; கோழை; வாயாடி; இவ்வளவு போதாமல் தற்பெருமை வேறு. அவன் உண்மையில் அருவருக்கத்தக்க தோற்றம் உடையவனாயினும் பெண்கள் பலர் தன்னை நினைத்தேங்குவதாக நினைத்துக் களித்துக்கொள்பவன். ஒலிவியாவின் பணிப் பெண்களுள் நகைத்திறனும், அறிவு நுட்பமும் உடைய மேரியா என்பவள் அவனைப் பலவகையிலும் எள்ளி நகையாடுவாள். ஸெஸாரியோ ஒலிவியாவின் காதலைப் பெற வந்துள்ளான் என்று அவனிடம் அவள் கூறி அவனை ஸெஸாரியோவுடன் போர் செய்யும்படி தூண்டினாள். அவன் கோழையானதால் போர் செய்ய அஞ்சினான். மேரியாவே விடாமல் அவனைக் கிண்டித் தள்ளிவிட அவன் வேண்டா வெறுப்பாய் வயோலாவிடம் போருக்கு வந்தான். வாளையே காணாத பெண்ணாகிய வயோலாவும் அவனது இயல்பையறியாமல் வலைப்பட்ட மான்போல் மருள ம விழித்தாள்.

ருள