சேக்சுபியர் கதைகள் - 2
219
பெனிடிக்: கிளாடியோ வேண்டுமென்று இக்குற்றம் செய்ததாக எனக்குப் புலப்படவில்லை. ஆயினும் அவனை எதிர்த்து வென்று உன் காதலுக்குத் தகுதியுடைவனாவேன்.
இம்மொழிகளுடன் பெனிடிக் கிளாடியோவை நாடிச் சன்றான். அச்சமயம் லியோனதோ இளவரசனையும் கிளாடியோவையும் வழிமறித்துத் தன் புதல்வியின் மானத்தைப் பழித்து அவள் உயிரை வாங்கியதற்காகத் தன்னுடன் போராடும்படி அவர்களை அழைத்தான். 'ஆண்டிலும் ஆட்சி முறையிலும் எங்களுக்குப் பெரியவரான தங்களுடன் நாங்கள் போர் செய்யமாட்டோம்' என அவர்கள் மறுத்துவிட்டனர். அச்சமயம் பெனிடிக்கும் வந்து போருக்கழைத்தான்.
5. உண்மை விளங்குதல்
இத்தறுவாயில் தீயவர் நலம் தீய்ந்து நல்லோர் தீமை நலிய அருள்புரியும் இறைவனது தோற்றம் போன்ற நற்செய்தி ஒன்று நிகழ்ந்தது. பொராகியோ தான்ஜான் ஏவலினால் தான் செய்துமுடித்த அரிய வேலைத்திறனைப் பற்றி வீம்பு பேசிக்கொண்டிருந்தான். குற்ற வழக்குத் தலைவர் ஒருவர் இதனைக்கேட்டிருந்து அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்டுவந்து லியோனதோ முன் விட்டார். லியோனதோவின் காவலர் அவனை அச்சுறுத்தி உண்மை முழுமையும் வெளியிடச் செய்தனர்.
ஹீரோ வகையில் தான் செய்த தீமையின் முழுவன்மையும் இப்போது கிளாடியோ மனத்தில் அழுந்திற்று. அவனுடைய தீச்சொல் கேட்டு ஹீரோ அடைந்த துயர்கூட அதற்கு ஈடன்று; தான் ஹீரோவுக்குச் செய்த தீங்கிற்கு அவன் அழலாய் உருகி, வியோனதோவை நோக்கி, அதற்காக எத்தகைய கழுவாய் புரியவும் தான் முன்வருவதாகக் கூறினான்.
லியோனதோ, 'என் மகளுக்குச் செய்த தீமைக்குச் சரியான கைம்மாறு அவளுக்கு இளையாளான அவள் போன்ற மற்றொரு புதல்வியை மணப்பதுதான்' என்றான். தன் மொழியால் தானே கட்டுண்டு கிளாடியோ இதனை வேண்டாவெறுப்பாய் ஏற்றான். முறைப்படி மணம் நடக்கலாயிற்று. மணத்திரை நீக்கியதும் கிளாடியோ மணவினையில் ஏற்பட்ட வழக்கப்படியே, 'நீ ஏற்றுக்