அப்பாத்துரையம் – 37
234 || உமக்கு நாலாபக்கமும் நரகத்தீயை என்னால் உண்டுபண்ண முடியும் என்பதை நீர் அறிந்து கொள்ளும். ஆகவே மறுபேச்சுப் பேசாமல் என் தம்பியை மன்னித்துவிட்டேன் என்று எழுதிக்கொடும்' என்றாள்.
று
தான் அச்சுறுத்துவதற்கு அஞ்சாததோடு இப்பெண் தன்னையே ஏமாற்றியது கண்டு முதலில் ஏஞ்செலோ திகில் கொண்டான்.ஆனால், மறுநொடியில் அவனது தீய அறிவு அவன் துணைக்கு வந்தது. உடனே அவன், 'பெண்மணி, என்னை மிரட்டுவதற்கு உன் அறிவைப் பயன்படுத்தாதே, உன் தம்பியைத் தப்ப வைப்பதற்கு அதைப் பயன்படுத்து, நீ வெளியிற் சென்று என்னைத் தூற்றுவாயானால் எல்லாரும் என்னையே நம்புவர்; உன்னை நம்பார். ஒருவரிருவர் நம்பக்கூடியவரும் உன் தூய்மையைத்தான் அவமதிப்பர்' என்று கூறிப் பேய்போல நகைத்தான். பின் 'சரி, உனக்கு ஒருநாள் தவணை தந்தேன். அதற்குள் முடிவு தெரிவி' என்றான்.
இஸபெல் அந்த ஒருநாளில் எப்படியும் இவன் வலையை அறுக்க வழிதேட வேண்டும் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள்.
4. மறைந்து நின்றருள் புரியும் அண்ணல்
இஸபெல் உடனே நேராகத் தன் தம்பியைக் காணச் சிறைக்கூடம் சென்றாள்.மடத்துத் துறவி உருக்கொண்ட பழைய தலைவன் அப்போது கிளாடியோவுக்கு அருளுரை தந்து கொண்டிருந்தான். இஸபெல் வந்ததும், அவன் “நான் சென்று வருகின்றேன். கடவுள் உன்னைக் காப்பாராக என்று ஒளிந்திருந்து அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்டுக் கொண்டிருந்தான்.
""
கிளாடியோ : இஸபெல், ஏஞ்செலோவைக் கண்ட காரியம் வெற்றிதானா?
இஸபெல்: உனக்கு உயிர் பெரிதாயின் வெற்றியே; மானம் பெரிதாயின் தோல்வியே.
கிளாடியோ : நீ சொல்வது விளங்கவில்லையே!