பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

237

அதன்படியே இஸபெல் ஏஞ்செலோவை ஏமாற்றி இரவு வந்து சேரும் இடத்தை அறிந்து அதற்கான திறவு கோல்களும் வாங்கி வந்துவிட்டாள். அவற்றின் உதவியால் மேரியானா தன் மனத்தைக் கொள்ளைகொண்ட கொடியவனை அடைந்து ஓரளவு தன்னை மறந்தாள்.

தீமையில் இறங்க இறங்கத் தீயவர் துணிவும் மிகுதி, தான் நினைத்த காரியத்தை முடித்துவிட்டதாக எண்ணிய ஏஞ்செலோ ஏன் இஸபெலை முற்றிலும் ஏமாற்றக்கூடாது என்று எண்ணி விடியற்காலையிலே கிளாடியோவைக் கொலை செய்யும்படி ஆள் அனுப்பினான். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த துறவியுருக் கொண்ட தலைவன் தனது தலைமை நிலைக்கான குறிகளைச் சிறைக் காவலனுக்குக் காட்டி அவனைத் தன் கருத்துக்கிணங்கச் செய்தான். அதன்படி அவன் கிளாடியோவை மறைத்து வைத்து விட்டு, வேறு இறந்துபோன ஒருவன் தலையைக் கொண்டுபோய்க் கொடுத்து, 'கிளாடியோவை வெட்டி விட்டேன்' என்றான்.

தன்னையும்

ஏஞ்செலோவின்

இன்னல்களையும்

வெளிப்படுத்தும் சமயம் வந்துவிட்டதெனப் பழைய தலைவன் இப்போது எண்ணினான். ஆகவே, தன் பயணத்தைச் சில காரணங்களால் நிறுத்துவிட்டுத் தான் திரும்புவதாகவும், மறுநாட் காலையிலேயே தனது தலைமை உரிமையைத் தன்னிடம் விட்டுவிட வேண்டுமென்றும் அவன் ஏஞ்செலோவுக்கு எழுதினான். அதோடு, தன்னிடம் குறை கூறிக்கொள்வோர் நகரத்துத் தெருக்களிலேயே முறையிட்டுக் கொள்ளலாம் என்று முரசறைவிக்கும்படி பணித்தான்.

ஏஞ்செலோ இழிகுணமுடையவன் என்பது இஸபெலுக்குத் தெரியும். ஆனால், தன் கீழான விருப்பத்தை ஈடேற்றிக் கொண்ட பின்னும் அவன் கிளாடியோவைக் கொல்வான் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. எனவே, அதனைக் கேள்வியுற்றதும் அவள் எண்ணாததெல்லாம் எண்ணி விம்மினாள்; வெகுண்டாள்; தன் தீவினையை எண்ணி மனமழுங்கினாள். ஏஞ்செலோ நயவஞ்சகன் மட்டுமன்று; நன்றியறிதலற்ற பன்றிமகன் என்பதுங் கண்டாள். இதற்கிடையில் பழைய தலைவன் நாளையே வருகிறான் என்ற முரசொலி