பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

அப்பாத்துரையம் – 37

ஒருவர் புகுந்து மீளுவாராயினர். இஃதனைத்தும் விழித்த கண் விழித்தபடி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரோமியோ. ரோஸாலினின் கொடுமையால் புண்பட்ட அவன் உள்ளத்தில் இவ்வினிய காட்சி படிந்து புண்ணாற்றியது.

ரோஸாலினைப்

மனத்தினின்றும் அகன்றது.

பற்றிய நினைவு அதனுடன்

வான

விண்மீன்களிடையே திங்கள் போலும், மங்கையரிடையே இந்திராணி போலும் அம்மங்கையர் குழாத்தில் ஒப்பற்ற வடிவழகி ஒருத்தி விளங்கினாள். அவள் அழகை நோக்க அவளைச் சூழ்ந்து நின்ற வாத்துக்கள் போலத் தோன்றினர். அவன் கண்ணுக்கு அங்குள்ள விளக்கங்கள் அனைத்தும் அவளிடமிருந்தே ஒளிபெற்று விளங்குவனவாகத் தோன்றின. 'ஆ! இத்தனை அழகும் இம்மண்ணுலத்திற்குரியது தானா? இது மனிதர் கண்கள் பார்க்கத் தக்கதுதானா?' என்று அவன் வியந்தான். அவள் அப்பெண்கள் கூட்டத்தில் இடையிடையே தோன்றித் தோன்றி மறையுந்தோறும் அவனுக்குத் தன் உயிரே அவளுடன் சென்று மீளுவதாகக் காணப்பட்டது.

காதல் வயப்பட்டோர், கவிதை வயப்பட்டோர், கள் வயப்பட்டோர் என்னும் இம்மூவரும் நாவை அடக்கார் என்பது பொதுச்சொல் அன்றோ? ரோமியோ உளமும் கண்ணும் அவ்வழகியர் கூட்டத்திற்குள்ளும் புறமுமாகத் திரியும்போது கூட அவன் நாக்கு மட்டும் ஓயாது அவளைப் புகழ்ந்து புகழ்ந்து பிதற்றிய வண்ணமாகவே இருந்தது. 'ஆஅ அவள் மேனி பொன்மேனி' என்பான்; அவள் ஆடைகள் பாலாடைகள் போன்றன' என்பான்; அவை ஆடைகள் அல்ல அன்னப் பறவையின் தூவிகள்' என்பான்; இத்தகைய பெண்ணைக் கப்பியூலகத்தின் மாளிகையில் வந்தா காணவேண்டும்? எமது குடிக்கு இத்தகைய தெய்வ வடிவம் கொடுத்து வைக்கவில்லையே என்றிவ்வாறு கூறிப் பலபடப்புலம்புவான்.

2. காற்று நுழையா இடத்தும் நுழையும் காதல்

ரோமியோவின் உள்ளத்தைக் கவர்ந்த அப்பெண்ணணங்கு வேறு யாருமல்லள். கப்பியூலத்துக் குடிகளின் குலக்கொடியாக