த
268) ||-
அப்பாத்துரையம் – 37
லவனிடம் சென்று, இச்செய்தியைத் தெரிவித்தான். புரோத்தியஸின் குணமும் திறனும் பற்றி வலந்தைன் புகழ்ந்துரைப்பது கண்ட தலைவன் அவனுக்கு வலந்தைன் நிலைக்கு ஒப்பான பணி தருவதாக மறுமொழி அளித்தான். அதனையறிந்த புரோத்தியஸின் தந்தை புரோத்தியஸை அழைத்து, மறுநாளே நண்பனிருக்கும் நகருக்குப் போகுமாறு உத்தரவளித்தான்.
இங்ஙனம் சிறுபிழையொன்றை மறைக்கப் புகுந்து பெருந் தொல்லைக்களான புரோத்தியஸ் மிகவும் மனமுடைந்தான். ஆயினும் தந்தை சொல்லைத்தட்ட மனந்துணியாமல் ஜூலியாவினிடம் சென்று பிரியாவிடை பெற்று மிலனுக்குச் சென்றான். ஜூலியாவும் தன் பயிர்ப்பாகிய திரையைக் கிழித்து அவனிடம் தன் காதலின் வன்மையை முற்றிலுங் காட்டியதுடன் தானும் உடன் வரவேண்டுமென்று மன்றாடினாள். ஆயினும், தொழில் முயற்சியை நாடிச் செல்பவர்க்குப் பெண்டிர் தடையெனக் கூறக்கேட்டு அவள் அமைந்து மனம் வருந்தி இருந்தாள்.
3. பொறாமைப் புழு
மிலனில் புரோத்தியஸ் வந்ததும் வலந்தைன், நெடுநாள் தாய்நாட்டை விட்டவன் அந்நாட்டவன் ஒருவனது வரவு கண்டாற்போல் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டான். மிலன் நகர்த்தலைவனிடம் அவன் புரோத்தியஸை அறிமுகம் செய்து வைத்து, தன் நாட்டில் எல்லாரையும்விட அறிவிலும் குணத்திலும் அவன் பெயர் பெற்றவன் என்பதை புகழ்ந்துரைத்தான். விரைவில் தலைவனும் வலந்தைனிடம் காட்டிய அதே பற்றும் அதே மதிப்பும் புரோத்தியஸினிடமும் காட்டலானாள்.
ஆனால், வலந்தைன் மட்டும் இப்போது வெரோணாவி லிருந்த வலந்தைனாயில்லை. அவனிடம் இப்போது ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. பெண்களின் பெயரையும் எடுக்காத அவன், இன்று தவைனின் புதல்வியாகிய 5ஸில்வியாச் சீமாட்டியின் உளமார்ந்த நட்பைப் பெற்றான். தலைவன் வலந்தைனை மிகவும் நேசித்துப் பாராட்டி வந்த போதிலும், தன்