சேக்சுபியர் கதைகள் - 2
271
நிறைந்த எண்ணமே மேலிட்டு உந்த நூலேணி ஒன்றின் உதவியால் பலகணி வழியாகச் சென்று காணலாம் என்றான்.
தலைவன், நூலேணியைப் பறிர் காணாமல் கொண்டு போவ தெங்ஙனம் என, வலந்தைன் என்னைப்போல் ஆடையுடுத்துக் கரந்து செல்க என்றான். இவ்வுரைக்கே காத்திருந்த தலைவன் அப்படியாயின் அவாடையைப் பார்ப்போம் என இழுத்த அளவில், வலந்தைன் ஒளித்து வைத்திருந்த நூலேணி தென்பட்டது.
தென்படவே, தலைவன் தனது நடிப்பைத் துறந்து வெகுளியுடன், “நன்றிகெட்ட பதரே, உண்ட வீட்டுக் கிரண்டக மாக என் புதல்வியின் மனத்தையா கெடுக்க எண்ணினாய்?" என அவனை இழித்துப் பேசி அவமதித்து நகரினின்றும் துரத்திவிட்டான்.
வலந்தைனை இங்ஙனம் காட்டிக் கொடுத்துத் துரத்தியபின் புரோத்தியஸ் தலைவனுக்கு உண்மையுள்ள நண்பனானான். அதோடு நில்லாமல் ஸில்வியாச் சீமாட்டியையும் அண்டி, அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ, வலந்தைனுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்தது மன்றி, புரோத்தியஸின் இழிதகையான நன்றியின்மையை அறிந்தவளாத லால், அவனையும் மனமார வெறுத்து விலக்கினாள்.
நெடுநாள்
5. காதல் துணிவ
புரோத்தியஸால் முதலில் காதலிக்கப்பட்ட ஜூலியா, அவனிடமிருந்து கடிதம் வராதது கண்டு கவலைக்கொண்டான். இறுதியில் அவனை எப்படியாவது கண்டுபிடிப்பதென்று துணிந்து ஆணுருத்தாங்கி மிலன் நகர் வந்து சேர்ந்தாள்.
ஜூலியா மிலனில் பெரிய விடுதி ஒன்றில் தங்கியிருந்தாள். தான் அங்கே அவ்வருவுடன் வந்திருப்பதை அறிந்தால் புரோத்தியஸ் தன்னை ஏளனமாக நினைப்பான் என்று எண்ணி அவள் கலை கொண்டதால், அவள் முகம் நகையிழந்திருந்தது. அவளை ஓர் இளஞ்செல்வனாகக் கொண்ட விடுதியாளன், அவளை மகிழ்விக்க எண்ணி, ஐய, இன் ன்று தாங்கள் நேரப்போக்கு விரும்புவதானால் நல்ல வாய்ப்பு ஒன்று உள்ளது.
66