பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

தனக்கும் அதே முடிவு

அப்பாத்துரையம் – 37

வந்தெய்துமோ என அஞ்சி, யாக்கோமகன்அவனிடம் வளைந்து பணிந்து அவனுக்கு உடந்தையாய் நின்று கொண்டான்.

ரிச்சர்டு இன்ப விருப்பினனும் சோம்பேறியுமாதலால் அரசியல் வல்லுநராகிய தன் சிற்றப்பரை அரசியல் வாழ்வில் ஈடுபடுத்தாது, தன் மனப்போக்கிற்கொத்த நமயசஞ்சீவிகளான 10புஷி, "பாகட், 12கிரீன் முதலியவர்கள் உறவையே நாடினான். இவர்களுதவியால் நாட்டின் சீர்த்திருத்தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த பொருளை அவன் ஊதாரித்தனமாகச் செலவு செய்துவந்தான். இப்படியும் வருவாயற்றுப் போகவே நாட்டின் செழித்த வட்டங்களைத் தனி மனிதருக்குப் பணயம் வைத்தும் வரிப்பணத்தை ஈடுவைத்தும் பொருள் திரட்டலானான்.மேலும், அவன் செல்வர்களான வணிகரிடமிருந்து கடன் என்ற பெயரால் பெருந் தொகைகளைக் கொள்ளையுங் கொண்டான்.

எதை மூடி வைத்தாலும் கொலையையும் வஞ்சத்தையும் மூடிவைக்க முடியாதன்றோ? அதன்படி கிளஸ்டர் முடிபு இயற்கையானதன்று; படுகொலையின் பயனே என்றும், அதுவும் ரிச்சர்டின் கைவரிசையே என்றும், ஆங்காங்கு மக்கள் கூறத் தலைப்பட்டனர். அதிலும், இக்கிளஸ்டர் பெருமகன் பேரரசன் மூன்றாம் எட்வர்டின் மகனும் பெருமக்களுள் தலைசிறந்தவனும் ஆனதனால், பெருமக்களிடையேயும் மிகவும் கிளர்ச்சி ஏற்பட்டது. ரிச்சர்டின் வாள்வலிக்கும் பொதுமக்களிடையே அவனுக்கிருந்த செல்வாக்குக்கும் அஞ்சியே, அவர்கள் வெளிப்படையாக அவனை எதிர்க்காத்திருந்தனர்.

இங்கிலாந்தின் பெருமக்களுள் செல்வாக்கிற் சிறந்தவன் 13நார்தம்பர்லந்துப் பெருமகன் ஆவன். அவனும் அரண்மனைக் காரியக்காரனான அவன் உடன் பிறந்தான் 14வொர்ஸபுடர் பெருமகனும் துணிந்து ரிச்சர்டின் கொடுங்கோன்மையைப் பற்றியும் தீச்செயல்களைப் பற்றியும் பலபடத் தமக்கள்ளும் பிறரிடமும் பேசலாயினர். ரிச்சர்டின் மற்றச் சிற்றப்பர்களாகிய ஜான் ஆவ்காண்டும் யார்க்கும் இவர்களுடன் நேராகக் கலக்கவில்லையாயினும் இவர்களையொப்பரிச்சர்டின் போக்கை மட்டிலும் வெறுத்தே வந்தனர். இவர்கள் ரிச்சர்டின் ஆட்சியுடன்