பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

அப்பாத்துரையம் - 37

முதன்முதல் அது வடகிழக்கு மூலையில் ஒரு சிறு வெண் முகிலுருவில் காணப்பட்டது.

ஹென்றி தன் தந்தை வழி உடைமைகளை மீட்கும் சாக்குடன் இங்கிலாந்தில் வந்திறங்கினான். நார்தம்பர்லந்து உடன் தானே அவனுடன் வந்து சேர்ந்தான். விரைவில் பெருமக்கள் பலரும் அவன் பக்கம் வந்தனர். வொர்ஸ்டர் பெருமகன் தன் பணியைத் துறந்து, தன் ஆட்களுடனும், அயர்லாந்து போகாது எஞ்சிய படைகளுடனும் எதிரி பக்கம் சென்றான். இங்ஙனம் ஹென்றி உருவில் எழுந்த சிற்றோடை, பார்க்லிக் கோட்டையரு வருவதற்குள் தடங்கரைக் காவிரியாய்ப் பெருகிற்று.

யருகே

பார்க்லிக் கோட்டையில் யார்க்கோ கோமகன் தன் சிறுபடையுடன் தங்கியிருந்தான். அவனும் ரிச்சர்டின் தீவழிகளைக் கண்டிப்பவனே யாயினும், கொண்ட கொள்கையை நிலைநிறுத்தும் உரமற்றவன். இக்கோழைத் தனத்துடன் தன்னலமும் சேர்ந்து அவனது தயக்கத்தை மிகைப்படுத்திற்று. முதலில் அவன் கிளஸ்டர் பக்கம் நலிந்திருந்தபோது ரிச்சர்டு பக்கம் சேர்ந்தான். இப்போது ரிச்சர்டு பக்கம் நலிந்து வருவது கண்டு அவன் மெல்ல மெல்ல அதனின்றும் நழுவலானான். இதற்கியைக் கிளஸ்டர் கோமாட்டியும் அவனிடம் சென்று தன் கணவனும் அவன் உடன் பிறந்தானுமாகிய கிளஸ்டர் கோமகன் கொலைக்குப் பழிவாங்குமாறு அவனைத் தூண்டி வந்திருந்தாள்.

இவற்றின் பயனாக யார்க் ஹென்றியை எதிர்க்கத் துணியவில்லை. ஆயினும், நன்றியற்றவனாய் விடவும் அவன் துணியாது நாக்கடிப்பாக ஹென்றியின் செயல் அடாதெனக் கண்டித்துப் பேசினான். ஹென்றி தன் உரிமைக்கு மட்டுமே போராட வந்ததாகக் கூறிபோதும், அவன் குடிகளுள் யாரும் தன் உரிமைக்காகக் கூட மன்னனை எதிர்க்கக்கூடாதென்ற ஒழுங்கை நினைவூட்டினான். இறுதியில் இவையனைத்தும் ஹென்றியின் படைவலிக்கு முன் பயனற்றதென்று கண்டு தான் நடுநிலைமை தாங்குவதாகக் கூறி அவனைப் பார்க்லிக் கோட்டைக்குள் விருந்தினனாய் வரவேற்றான். இவ்வளவு இடம் பெற்ற ஹென்றி விரைவில் மூக்கிடம் பெற்ற ஒட்டகம் போல் கோட்டை கொத்தளம் முதலிய யாவற்றையும் படையையும் தன் வயமாக்கிக் கொண்டான்.