பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அப்பாத்துரையம் – 37

பேய்' என்றபடி ரிச்சர்டுக்கு ‘அவன் தன் மறைப்பையும் நடிப்பையும் முற்றிலும் துறந்து நேரே தன் முடிவைக் கேட்கிறானோ' என்று தோன்றிற்று. தோன்றவே, தன் மன அமைதியையும் பகுத்தறிவையும் சற்றே பறிகொடுத்து விட்டு, ‘ஏன் ஐயன்மீர், இத்துணை நாள் விட்டுக்கொடுத்தது போதாது என்றா இன்னும் வருகிறீர்? உம் தலைவர், நான் எவ்வளவு பணிந்தால் நிறைவடைவார்? அவருக்கு இந்த ஒரு மணிமுடி போதுமா? இந்த ஓர் அரசிருக்கையும் இந்த ஓர் அரண்மனையும் அல்லது இந்த ஒரு நாடும் உலகமுந்தான் போதுமா? இவ்வளவும் போதாமல் இருந்தால் இந்த ரிச்சர்டின் உயிரே வேண்டுமானாலும் தருகிறேன். அதுமட்டுமன்று; என் அரசுரிமையோடுகூட என் தன் மதிப்புங்கூட வேண்டுமா? என்று கேட்டு வருவீர். நான் அரசனாக வாழாமல் தனி மனிதனென்ற முறையிலாவது வாழலாமா? இந்த இங்கிலாந்தில் என் மனைவியும் நான் மிதக்கும் நிலமுமாவது எனக்குரியவை என்று நான் சொல்லிக் கொள்ளலாமா? இவையனைத்தையும் நீர் அறிந்து வந்து சொல்லும்!” என்றிவ்வாறு தன் மனக்கொதிப்பைக் கேள்வி களாக வார்த்துக் கொட்டினான்.

நார்தம்பர்லந்து, “அரசே! தற்போது தாம் தருவதாகக் கூறுவதன் ஒரு பகுதி போதும். நான் எம் தலைவரைக் கலந்துகொண்டு வருகிறேன்” என்று கூறி அகன்றான்.

ங்ஙனம் அகன்ற நார்தம்பர்லந்து விரைந்து பாலிங் புரோக்கினிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறினான். ரிச்சர்டினிடம் படைவன்மை இல்லையென்றும், தன் வலிமை யின்மையைத் தானே உணர்ந்து அவன் கோபமும் தாபமும் அடைகிறான் என்றும் கேட்டதே. பாலிங் புரோக்குக்குத் தன் எதிரியின் வன்மையிற் பாதி அப்போதே தன் பக்கம் வந்து விட்டதாகத் தோற்றியது. அப்பெருமையை அவன் அடக்க ஆற்றாது உடன்தானே நார்தம்பர்லந்தை நோக்கி, "ரிச்சர்டிடம் பின்னும் ஒருமுறை செல்க; சென்று, முற்றத்தில் நான் நிற்பதாகவும் இறங்கி வந்து பார்க்கத் திருவுளம் செய்ய வேண்டுமென்றும் கூறுக” என்றான்.

நார்தம்பர்லந்து மூலம் இம்மொழிகள் ரிச்சர்டின் செவிகளில் புகவும், அவன், எண்சாண் உடலும் ஒரு சாணாகக்