பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

அப்பாத்துரையம் – 37

தனது புதிய வலிமையின் வெறியால் ரிச்சர்டு அவளுக்குத் தன் இறுதி முத்தமளித்து விடைகொள்வதைக் கூட அவன் தடுத்தான். அப்போது அரசியின் முகம் சரேலென்று சிவந்து கறுத்தது. உயிரினும் இனிய தன் துணைவிக்கு நேர்ந்த அவமதிப்புக்கண்டு ரிச்சர்டு சீறினான்.

சீற்றத்தால் ஒரு வாழ்நாளின் அரசுரிமை வீறுமுற்றும் ஒரு நொடிக்குள் அவன் முகத்திலும் நிலையினும் வந்தேற, அவன் நார்தம்பர்லந்தை அழலெழ நோக்கிக் கேட்போர் அஞ்சும் வஞ்சின மொழிகள் பகரலானான்.

66

காண்ட முடி மன்னனுக்கு வஞ்சகம் செய்த நீ, கொண்ட கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்க எண்ணுதல் இயல்புடையதே!

"முடி மன்னனுக்கு வஞ்சமிழைத்த நீ, அவ்வஞ்சத்தின் பயனாக உயர்த்திய நின் கைப்பிடி மன்னனுக்கு வஞ்ச மிழைப்பாய்!

"மணிமுடியார்வத்தால் தீங்கிழைத்த நின் தலைவற்கு, துன்பத்தையும்

அம்முடி முள்முடியாகி

வெறுப்பையுந் தருவதாக!

அவனுக்குத்

"முடிமன்னர் குடிக்கெதிராக மேலோங்கிய நின் புன்கை நின் குடியையுங் கெடுக்க!” என்றான்.

இப்பழி மொழிகளைப்பொருட்படுத்தாது நார்தம்பர்லந்து சிரிக்க முயன்றான். ஆனால், அது பேய்ச்சிரிப்பையொத்து நகையிழந்திருந்தது. மன்னனுடன் உள்ளூரப் பரிவு கொண்டவர்கள் உள்ளங்களையும் இம்மொழிகள் ஈர்த்தன.

அனைவரும் பேச்சு மூச்சின்றி நிற்ப, ரிச்சர்டும் அரசியும் வாயற்ற நெடும் பார்வையுடனும் நெடுமூச்சுடனும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். இது முதல் ரிச்சர்டின் வாழ்வு, குறுகிய மணிக்கூண்டுச் சிறையினும்; அரசியின் வாழ்வு, அகன்ற பயைற்ற மடத்து வாழ்விலும் கழியலாயின.

அரசி, தன் வாழ்நாளை நெடுநாள் தாங்க இயலாது உடல் வாடி வதங்கி உலகை நீத்தாள். அவள் உயிர் தன் தலைவனை எதிர்கொள்ள முன்கூட்டி விண்ணுலகெய்திற்று.