பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. விரும்பிய வண்ணமே

(As You Like It)

1. மற்போரில் ஆர்லண்டோ' வெற்றி பெறுதல்

பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்; அவனுடைய தம்பி பிரடரிக்2 என்பவன் அவனுக்குப் பகைவன் ஆனான். பிரடரிக் தமையனைக் காட்டிற்குத் துரத்தி விட்டுத்தானே அரசனாக ஆளத் தொடங்கினான்.

நாட்டை இழந்த மன்னனுக்கு நெருங்கிய நண்பர் பலர் இருந்தனர். அவர்களும் அவனுடன் காட்டிற்குச் சென்றார்கள். அந்த மன்னன் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பினால், தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வது அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. இயற்கை வாழ்வு அவர்கள் நெஞ்சில் அன்பை வளர்த்தது.காட்டில் வாழும் மான் முதலிய விலங்குகளை அவர்கள் கொல்லவில்லை; அவைகளை அவர்கள் அன்போடு போற்றினார்கள். அங்குக் கிடைக்கும் காய்கனி முதலியவை களைத் தங்கள் உணவாகக் கொண்டார்கள். மன்னனும் அவர்களோடு கூடி மகிழ்ந்து காலத்தைப் போக்கி வந்தான்.

4

இவ்வாறு காட்டில் காலங்கழித்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ரோஸலிண்ட்3 பிரடரிக் அவளைக் காட்டிற்கு அனுப்பவில்லை. தன் மகளாகிய ஸீலியா என்பவளுக்குத் தோழியாக இருக்குமாறு தன் அரண்மனையில் நிறுத்திக் கொண் டான். தந்தை பெரிய தந்தைக்குச் செய்த தீங்கு ஸீலியாவுக்குத் தெரியும். அவள் தன்னுடன் இருந்த ரோஸலிண்ட் வருந்தும்போதெல்லாம் அவளுக்குத் தேறுதல் கூறிவந்தாள்; அவளை மகிழ்விப்பதற்காகத் தன்னால் இயன்ற முயற்சி யெல்லாம் செய்துவந்தாள்.