பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

25

தானும் அவனைப்போலவே திக்கற்றவளாக இருத்தலை எண்ணி மனம் உருகினாள்; அவளுடைய அன்பும் இரக்கமும் மிகுந்தன.

வ்விருவருடைய அன்பும் ஊக்கம் அளித்தமையால், அவன் மனத்திட்பமுடையவனாய் மற்போர் செய்து, இணையிலா வெற்றி பெற்றான். அவனோடு பொருத வீரன் உடல்முழுதும் புண்பட்டு வருந்திச் சோர்ந்தான்.

5

பிரடரிக் மன்னன் இளைஞனுடைய வீரத்தை மிகப் போற்றினான்.“நீ யார் மகன்? உன் பெயர் என்ன?” என்று அவனை அன்போடு வினவினான். "பெருந்தகையே! சர்ரோலண்ட் என்ப வருடைய இளைய மகன் நான். என் பெயர் ஆர்லண்டோ,” என்று இளைஞன் வணங்கி விடையிறுத்தான்.

66

சர் ரோலண்ட் என்ற பெயரைக் கேட்டதும், அரசன் கொண்டிருந்த அன்பு அகன்றது; அவன் உள்ளத்தில் வெறுப்பு நிறைந்தது. என் தமையன் காட்டிற்குச் சென்றபோது அவனுடன் சென்று வாழ்ந்த நண்பர்களுள் சர்ரோலண்ட் என்பவனும் ஒருவன் அல்லனோ? இந்த இளைஞன் அவனுடைய மகனாக இருக்கின்றானே!” என்று வருந்தித் தன் அரண்மனை சேர்ந்தான்.

2. மகளிர் இருவரும் காட்டில் வாழ்தல்

தன் தந்தைக்கு நண்பனான சர்ரோலண்ட் என்பவன் மகனே இவ்விளைஞன் என்று அறிந்த ரோஸலிண்ட் பெரிதும் உவந்தாள்; ஸீலியாவுக்குத் தன் மகிழ்ச்சியை அறிவித்தாள். இருவரும் அவனிடம் சென்றனர். தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கச் சென்றவர்கள் அவன் முகவாட்டத்தைக் கண்டு வருந்தினார்கள். அரசன் வெறுப்பே அவன் வருத்தத்திற்குக் காரணமென்று அறிந்தார்கள். “உன்னுடைய வீரத்தை வியந்து வாழ்த்துகிறோம்; உனக்குக் கவலை ஒன்றும் வேண்டா; மகிழ்ந்திரு," என்று அவனைத் தேற்றினார்கள். அப்போது ரோஸலிண்ட் தன் கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தை அவனுக்குத் தந்து, "இதனினும் சிறந்த பரிசிலை உனக்குக் கொடுக்க முடியவில்லையே என்று நான் மிகவும் வருந்துகின்றேன்,” என்று கூறினாள்; பிறகு இருவரும் அரண்மனைக்குத் திரும்பினர்.