பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அப்பாத்துரையம் – 37

55

கனிமீட் வேண்டுமென்றே ஆர்லண்டோவை ஏமாற்றுகின்றான்,' என்று எல்லோரும் எண்ணினார்கள். அரசன் ஆர்லண்டோவை அழைத்து, “கனிமீட் கூறுவதை நீ ஏன் நம்பினாய்?" என்று கேட்டான். இதற்குள் கனிமீட் ஆகிய ரோஸலிண்ட் வந்துவிட்டாள். அவள் அரசனை நோக்கி, “தங்கள் மகள் இவனை மணப்பது தங்களுக்கு உடன்பாடுதானா?” என்று கேட்டாள். அரசன், தன் மகள் எவ்வாறு இங்கு வரமுடியும் என்று வியந்தவனாய், “அவ்வாறு அவள் ஆர்லண்டோவை மணப்பது எனக்கு உடன்பாடே, அவளுடைய திருமணத்தின் போது சீர் சிறப்பாக அளிக்க என்னிடம் ஒன்றும் இல்லையே. நாட்டை இழந்து காட்டில் வாழும் நான் என்ன செய்தல் கூடும்?” என்று வருந்தினான். உடனே அவள் ஆர்லண்டோவை நோக்கி, “நீ விரும்புகின்ற ரோஸலிண்ட் இங்கே வந்துவிட்டால், அவளை மணக்கஉடன்பட்டிருக்கிறாய் அல்லையோ?” என்று வினவினாள். எனக்கு அது முற்றிலும் உடன்பாடே. ஆனால் அவளை மணப்பதற்கு ஏற்றவாறு எனக்கு அரசுரிமை இல்லையே என்று வருந்துகின்றேன்,” என்றான் அவன்.

66

தமக்கையும் தங்கையும் அங்கிருந்தவர்களை விட்டுச் சென்றனர்; இடையனும் இடைச்சியுமாக உடுத்தியிருந்த உடைகளைக் களைந்தனர்; தங்களுடைய பழைய உடைகளை அரண்மனையில் வாழும்போது அணிந்திருந்த அழகிய உடைகளை எடுத்து உடுத்தினர். மந்திரமும் மாயமும் இன்றியே இடையன் பெண் ஆனான். பிறகு இருவரும் திருமணக் கூட்டத்தாரிடம் வந்தனர்.

அவர்கள் அங்கு வந்து சேர்வதற்குள், அரசன் தன் மனத்தில் எழுந்த ஓர் ஐயத்தை ஆர்லண்டோவிடம் வெளியிட்டான்.“அந்த இடையன் கனிமீட் என் மகள் ரோஸலிண்ட் போன்று தோன்றுகிறான்," என்று சொன்னான். "ஆம்; அவ்வாறுதான் தோன்றுகிறான்,” என்றான் ஆர்லண்டோ. இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டிருக் கையில், ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் அங்கு வந்துவிட்டனர்.

ரோஸலிண்ட் அங்கு வந்தவுடன் அரசனை வணங்கி, “தந்தையே எனக்குத் தங்கள் நல்வாழ்த்து வேண்டும்,” என்று வேண்டினாள். "இஃது என்ன விந்தை!" என்று அங்கிருந்தோர்