பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(38) ||

அப்பாத்துரையம் – 37

எண்ணினான். இரண்டாம் உருவம். "கௌடர் தலைவரே! வாழ்க!” என்றது. இதனைக் கேட்டதும், அவன், “இப்பெயருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லையே," என்று எண்ணி மிகுதியான வியப்பு அடைந்தான்; மூன்றாம் உருவம், "ஸ்காட்லாந்து மன்னராகும் பேறு பெற்றவரே! வாழ்க" என்று வாழ்த்தியது. இதனைக் கேட்ட மாக்பெத் திடுக்கிட்டான். “டன்கன் மன்னனுக்கு மைந்தர் இருவர் இருக்க, நான் மன்னன் ஆவதாக வாழ்த்தியது ஏன்? இவைகள் உரைத்தவற்றை நம்புதல் யலாது," என்று று எண்ணினான். உடனே, அவைகள் பாங்கோவை நோக்கி, “மாக்பெத்தைப் போல அரசனாகும் பேறு உனக்கு ல்லை. ஆனால், உன் மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப்பெறுவார்கள்,” என்று உரைத்துவிட்டு மறைந்து விட்டன. அவ்வாறு மறைந்ததைக் கண்ட படைத்தலைவர் இருவரும் அவைகளை மாயக்காரிகள் என உணர்ந்தார்கள்.

மாயக்காரிகள் உரைத்தவற்றை இருவரும் எண்ணிக் கொண்டு நின்றபோது, அரசனிடமிருந்து தூதர் சிலர் வந்தனர்; வந்து மாக்பெத்தை நோக்கி, “அரசர் தங்களுக்குக் 'கௌடர் தலைவர்' என்னும் பட்டத்தை அளித்திருக்கின்றார். அதைத் தங்களுக்கு அறிவிக்கும் படியாக எங்களை அனுப்பினார்,” என்றனர். "மாயக் காரிகள் உரைத்தவற்றுள் ஒன்று உடனே பலித்து விட்டதே! இஃது என்ன வியப்பு! நான் ஸ்காட்லாந்து மன்னன் ஆவதும் மெய்யாகி விடும் அன்றோ! ஒன்று பலித்தபோது, மற்றொன்றும் பலிப்பது உறுதி,”என்று மாக்பெத் தன்னுள் எண்ணினான்.

பிறகு, அவன் தன்னுடன் இருந்த பாங்கோவை நோக்கி, "உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்து அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே; அக்கூற்றை நீ நம்பவில்லையோ? என்னைப் பற்றி அவர்கள் உரைத்த வருபொருள் ஒன்று மெய்ப்பட்டது. ஆகவே, உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்தை ஆளுவார்கள் என்பதை நம்பலாம்." என்றான்; “இந்த நம்பிக்கை கொடியது; அரசுரிமையை நாம் பெற வேண்டும் என்ற அவாவினையும் அரசன்மீது பொறாமையையும், மற்றத் தீய எண்ணங்களையும் அந்நம்பிக்கை வளர்க்கும். மாயக்காரிகள் இத் தன்மையான நம்பிக்கையை அளித்துத்தான் மக்களைக் கெடுத்துப் பாழாக்குகின்றார்கள்,” என்று பாங்கோ கூறினான்.