பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அப்பாத்துரையம் – 37

அறியான். அவன் விலையுயர்ந்த நன்கொடை ஒன்றை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்; தன்னுடன் வந்தோர்க்கும் தக்க பரிசுகள் வழங்கினான்; வழிநடையால் களைப்புற்றிருந்தமையால், விரைவில் பள்ளியறைக்குச் சென்று உறங்கினான். அவன் அருகே வேலையாட்கள் இருவர் படுத்து உறங்கினர்.

எல்லோரும் உறங்கிவிட்டனர்; எங்கும் அமைதி நிலவிற்று. கொடிய விலங்குகளும் கொலைஞரும் கள்ளரும் நள்ளிரவில் விழித்திருத்தல் உண்டு. மாக்பெத் மனைவியும் கொடிய எண்ணமும், கொலை முயற்சியும் உடையவளாய் நள்ளிரவில் விழித்து எழுந்தாள். தன் கணவன் இரக்க முடையவன் என்றும், அரசனைக் கொல்லத் துணியான் என்றும் அவள் எண்ணி, கையில் கட்டாரி எடுத்துக் கொண்டு, அரசனது படுக்கையருகே சென்றாள். அவள் கொடுத்திருந்த கள்ளைக் குடித்த மயக்கத்தால் வேலையாட்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் அரசனை உற்றுப் பார்த்தாள்; தன் தந்தையை நினைத்துக் கொண்டாள்; "இவர் முகம் என் தந்தையின் அன்பான முகம் போலவே தோன்றுகின்றதே!" என்று எண்ணிக்கொண்டே திரும்பி வந்து விட்டாள்; கணவனையே தூண்டி அனுப்ப முயன்றாள்.

ஆனால், மாக்பெத் மனம் இரங்கி “அந்தோ! அரசரை நான் எப்படிக் கொல்வேன்? அவருடைய உப்பை உண்டு வாழ்கின்ற நான் அவரை எங்ஙனம் கொல்வேன்? நன்றி கெட்ட பாவி ஆவேனோ? அவர் என்னைக் காத்த அரசர்; எனக்கு நெருங்கிய உறவினர். அன்பு மிக்கவர்; அருள் நிறைந்தவர்; நம்பிக்கை கொண்டவர்; ‘கௌடர் தலைவர்' என்ற பட்டம் அளித்தவர், என்னைப் பெருமைப் படுத்தியவர். அவரைக் கொன்றுவிட்டு நான் வாழவேண்டுமோ? என் பெருமை பாழ்படுமே! குடிகளின் பகையை விலை கொடுத்து வாங்கினவன் ஆவேனே! தகாது, தகாது; இந்த எண்ணம் தகாது," என்று பலவாறு கூறத் தொடங்கினான்.

ம்மொழிகளைக் கேட்டவுடன் அவனுடைய மனைவி திடுக்கிட்டாள்! “என்னுடைய முயற்சி வீணாகும் என்று தெரிகின்றதே," என்று எண்ணினாள். ஆயினும், அவள் தீத் தொழிலில் திண்மை உடையவள். ஆதலால், உறுதி தளரவில்லை.