பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அப்பாத்துரையம் – 37

என்று கருதவேண்டா. நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. உன்னை நான் கொல்வது திண்ணம்; உன்னை ஒழிப்பது உறுதி,” என்று வஞ்சினம் உரைத்தான்.

மூன்றாம் ஆவி தோன்றி, வி தோன்றி, "மன்னவ! நீ ஒருவர்க்கும் அஞ்சாதே. பலருடைய பகையும் உன்னை ஒன்றும் செய்யாது. பர்னம்" காடானது டன்ஸினேன்" மலை நோக்கி வந்து, உன்னை எதிர்க்கும் வரை உனக்குக் கேடு இல்லை," என்று கூறியது. மாக்பெத் மனம் மகிழ்ந்தான். "காட்டைப் பெயர்த்து வந்து என்னை எதிர்க்கவல்லவன் ஒருவனும் இலன்; என் வாழ்நாளைப் பற்றி எனக்கிருந்த கவலை ஒழிந்தது. எனக்குள்ள மற்றோர் ஐயம் பெரிதாக வருந்துகின்றது. அந்த ஐயத்தைப் போக்க முடியுமானால் சாலவும் மகிழ்வேன். பாங்கோவின் வழித் தோன்றுவோர் இந்த அரசுரிமையைப் பெறுவாரோ? கூறுக,” என்று அவன் வேண்டிக்கொண்டான். அந்த ஆவி மறுமொழி கூறாமல் மறைந்துவிட்டது.

அப்போது மாக்பெத் இன்னிசைக் கருவிகள் ஒலித்தலைக் கேட்டான். அவன் எதிரே அரசர் எண்மர் நிழலுருவங்கள் தோன்றின. அவற்றுள் எட்டாம் உருவம் பாங்கோவின் உருவமாக இருந்தது. அது கையில் கண்ணாடி ஒன்று வைத்திருந்தது. அக்கண்ணாடியில் அரசர் பலருடைய நிழலுருவங்கள் காணப்பட்டன. பாங்கோ உடல் முழுவதும் இரத்தக்கறை உடையவனாய்க் காணப்பட்டான்; அவன் புன்சிரிப்புடன் அவ்வுருவங்களை மாக்பெத்துக்குக் காட்டினான். மாயக்காரிகள் மாக்பெத்துக்கு விடை தந்து, ன்னிசை ஒலிக்க மறைந்து

விட்டனர்.

பாங்கோவின்

நிழலுருக் காட்டிய அரசர்கள் ஸ்காட்லாந்தை ஆளப்போகின்றவர்கள் என்றும், அவர்கள் பாங்கோவின் வழித் தோன்றுவோர் என்றும் மாக்பெத் உணர்ந்தான். அன்றுமுதல் அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை ஆயின.

அவன் குகையை விட்டு அப்பாற் சென்றான். வழியில் தூதன் ஒருவன் வந்து, “பெருமானே! மாக்டப் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். அங்கே மால்கம் தங்களுக்கு எதிராகப் பெரும்படை திரட்டுகின்றாராம். அப்படையில் மாக்டப்