பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

49

தூதன் சென்றுவிட்ட பிறகு, அரசன் பலவாறு எண்ணத் தொடங்கினான். “ஆவிகளின் மொழிகள் பொய்யாகுமோ? அந்தக் காடு இந்த மலையை நோக்கிப் பெயர்ந்துவரும் வரைக்கும் அழிவு இல்லை என்று ஆவிகள் கூறியதை உண்மை என்று நம்பியிருந்தேனே! அந்தக் காடு பெயர்ந்து வருகின்றது என்று தூதன் கூறுகின்றான். காடு பெயர்ந்துவருமோ? என்ன வியப்பு! கேட்டறியாத புதுமையாக இருக்கின்றதே! அப்படிக் காடு பெயர்ந்து வருமானால், நான் அழிவது திண்ணம் அன்றோ? அதைத் தடுக்க முடியுமோ? எங்காவது ஓடிச் சென்றுவிடுதல் என்றால் அது வீரனுக்குத் தகுமோ? அத்தகைய இழிந்த செயலை நான் செய்வேனா? இதோ, புறப்படுவேன்; போர்க்கோலம் பூண்டு எதிர்த்துப் போர் செய்வேன். ஆறிலும் சாவு நூறிலும் சாவு; எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பு மிகுந்துவிட்டது. என் வாழ்வு இன்றோடு முடிந்தாலும் நலமே,” என்று அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். அதற்குள் மால்கம் படையும் அரண்மனையை நெருங்கிவிட்டது.

அரசன் அப்படையின் தோற்றத்தைக் கண்டான். வியந்தான்; பர்னம் காடு பெயர்ந்து வருதல்போலவே தோன்று தலைக் கண்டு தன் நம்பிக்கை இழந்தான்.

மால்கம் தன் படையுடன் புறப்பட்டு,பர்னம் காட்டுவழியாகத் தான் வந்தான்; தன் படையின் அளவு எதிரியின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினான்; அதற்காக அக்காட்டிலிருந்த மரக்கிளைகளை வெட்டி வீரர் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கிளையைக் கையில் ஏந்திவருமாறு கட்டளை யிட்டான். அவ்வாறே வீரர் அனைவரும் செய்யவே, பர்னம் காடு நகர்ந்து வருதல் போலத் தோன்றியது. ஆவியின் வாக்கு உண்மையாயிற்று.

6. கேடுசூழ்ந்தவனே கெடுதல்

போர் மூண்டது. மாக்பெத்துக்குப் பெரும்படை இருந்த போதிலும் அப் படையிலிருந்தோர் எல்லோரும் அவன்மீது கொண்ட வெறுப்பால், ஊக்கமுடன் போர் செய்யவில்லை; அவனுடைய கொடுங்கோன்மையைப் பொறுக்கமுடியாமல், “எப்போது மால்கம் வருவார்! எப்போது நாம் அவருடன்