பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

53

கதைச் சுருக்கம்

மந்திர நூலாராய்ச்சியில் மூழ்கிய மிலன் அரசனாகிய பிராஸ்பிரோவை அவன் தம்பி அந்தோனியோ அவன் பகைவனாகிய நேபல்ஸ் அரசன் உதவிகொண்டு வீழ்த் அரசனானான். பிராஸ்பிரோ கைக்குழந்தையாகிய மிராந்தாவுடன் சிறு படகில் கடலில் தள்ளப்பட்டான். ஆனால், அவன் நண்பனாகிய கன்ஸாலோப் பெருமகன் பிறருக்குத் தெரியாமல் படகில் அவர்களுக்கு வேண்டிய ணவு

உடைகளையும், மந்திர நூல்களையும் வைத்திருந்தான். ஆகவே, அவர்கள் ஸிகோராக்ஸ் என்ற மாயக்காரியிருந்த தீவில் இறங்கியதும், பிராஸ்பிரோ இறந்து போன ஸிகோராக்ஸ் அடைத்து வைத்து ஏரியல் என்ற நல் ஆவியை விடுவித்து அதனுதவியால் காற்றையும் கடலையும் ஏவி யாண்டதுடன், ஸிகோராக்ஸின் பிள்ளையாகிய அரை விலங்கியல்புடைய காலிபனையும் அவனுதவியால் கடுவேலையிற் பழக்கிக் கொண்டான்.

ஒருநாள் நேபல்ஸ் அரசனும் அவன் மகன் இளவரசன் பெர்திநந்தும், அந்தோனியாவும் ஒரு கப்பலில் அவ்வழியே போய்க் கொண்டிருந்தார்கள்.பிராஸ்பிரோ ஏரியலைத் தூண்டி ஒரு மாயப் புயலை எழுப்பிக் கப்பல் கவிழ்ந்தது போல் காட்டி ஒவ்வொருவரையும் தனித் தனியே கரையில் தப்ப வைத்தான். அவர்களுள் பெர்திநந்தைப் பிராஸ்பிரோ தன் மகள் ருக்குமிடம் கொணர்விக்க அவர்கள் எளிதில் காதல் காள்கின்றனர். பெர்திநந்துக்குக் கடுவேலை கொடுப்பதன் வாயிலாக அவர்கள் காதலின் ஆழத்தை ஆய்ந்தபின் பிராஸ்பிரோ அனைவரையும் ஒருங்கு சேரவிட்டுத் தன் மாயமனைத்தும் கூறுகிறான். அந்தோனியோவும் நேபல்ஸ் அரசனும் தம் பிழை கண்டு வெட்கி மன்னிப்பு வேண்டுகின்றனர். அனைவரையும் ஏரியல் நாட்டுக்கு விரைந்தனுப்ப அங்கே பெர்திநந்துக்கும் மிராந்தாவுக்கும் மணம் நிகழ்ந்தது. ஏரியல் அவர்களை அனுப்பியவுடன் முழு விடுதலையும் பெற்றான்.