பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

75

பட்டதும் அந்தோணி, மேற்பணியாளன் வரவு கேட்டு எழும் குடிவெறிப்பட்ட படைஞன் போல் எழுந்தான். தனது நாடாகிய எகிப்துக்கே இடையூறு வந்தது கண்டு கிளியோப்பாத்ராவும் அந்தோணியின் காதிற் புகைக்கு நறுந்தூளிடும் வேலையை விட்டு எழுந்தாள். விரைவில் அமைச்சர்களுக்கும் படைத் தலைவர் களுக்கும் உத்தரவுகள் பறந்தன. பேடியரும் சேடியரும் அஞ்சி அகல நிற்க வீரரது போர் அவை கூடிக் கலந்தது.

அந்தோணியை விட்டகல விரும்பாமல் கிளியோப்பாத்ரா தானும் போரில் தன் படைக்குத் தலைவியாய் வரவேண்டுமென்று விரும்பினாள். அந்தோணியின் அமைச்சனும் நண்பனுமான எனோபார்பஸ், பெண்டிர் போர்க்களம் செல்வது நன்றன்று என்றும், அதிலும் கிளியோப்பாத்ரா அந்தோணிக்குக் காற்கட்டாயிருப்பாள் என்றும் கூறினான். கிளியோப்பாத்ரா இதனை ஏற்காது அவனை வாயடக்கினாள்.

கிளியோப்பாத்ராவின் இப்பிழைகளால் வந்த தீங்கையன்றி வேறெவ்வகையிலும் வெற்றிக்குரிய முழுவன்மை அந்தோணி பக்கமே இருந்தது. அவனது படை அவ்வளவு வீரமும் நற்பயிற்சியுமுடையது; அஃது அவனிடம் நிறைந்த பற்றுடையது; அவனுக்காக உயிரை ஒரு பொருட்டாக மதியாது போரிடும் இயல்புடையது. அந்தோணியும் ஒப்பற்ற வீரன்; தன் படைகளை வெற்றிமேல் வெற்றியாக நின்று நடத்திய நேரிலாத் தலைவன்; ஸீஸரின் படை அந்தோணியின் படைக்கு ஈடுடையதும் வீரமுடையதுமன்று; ஸீஸரும் வீரத்திலும் தலைமைத் திறத்திலும் அந்தோணிக்கு ஈடுடையதும் வீரமுடையதுமன்று; ஸீஸரும் வீரத்திலும் தலைமைத் திறத்திலும் அந்தோணிக்கு ஈடு ஆகான்.

கடற்படை வகையில் நிலைமை இதற்கு நேர்மாறானது. ஸீஸர் படை பாமபியால் பயிற்சி தரப்பட்டது; அந்தோணியின் கப்பற்படையோ எகிப்து அரசி உலாப்போகும் சமயம் அழகிற்காக உடன்செல்ல ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, நிலத்தற் போர் புரிவது அந்தோணிக்கே நல்லது என்றும் கடலிற் போர் புரிவதே தனக்கு நல்லது என்றும் ஸீஸருக்கு நன்கு புலப்பட்டது. எங்கே அந்தோணி தன்னை நிலத்தில் தாக்கிவிடுவானோ என்று அவனுக்கு உள்ளூர அச்சமாயிருந்தது.