பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம்

கிளியோப்பாத்ராவின் போக்கு இதிலும் ஸீஸருக்கு நன்மையாகவே முடிந்தது. எனோபார்பஸ் அந்தோணியின் கடற்படையை விட நிலப்படையே வெற்றியுடன் போர்புரியத் தக்கது என்றபோது, அவள் அவன் தன் நாட்டின் கடற்படையைக் குறை கூறினான் எனக்கொண்டு இதிலும் அவன் கூறியதற்கு நேர்மாறாக அந்தோணியைத் தூண்டினாள். 'தையல் சொற் கேளேல்' என்னும் மூதுரையை மீறி அவனும் அவள் சொல்வதையே மேற்கொண்டு கடலிலேயே சண்டை

செய்யுமாறு எனோபார்பஸுக்குக் கட்டளையிட்டான்.

எனோபார்பஸ் கூறியபடியே எகிப்தியக் கடற்படைஸீஸரது படையுடன் சில மணி நேரங்கூட நிற்க ஆற்றாமல் முறிந்து பின்னடைந்தோடியது. கிளியோப்பாத்ராவும் உடன் தானே

நடுநடுங்கித் தன் கப்பலையும் அவற்றுடன் ஓடும்படி ஆணையிட்டாள்; பாவம்! தான் போவது அந்தோணிக்கு உயிர் போவது போல் இருக்கும் என்பதை அவள் மறந்தாள்.

இருபடையும் நெருங்கிப் போர்புரியும் வேளையில் அந்தோணியின் கண்கள் தற்செயலாகக் கிளியோப்பாத்ராவின் பக்கமாகச் சாய அப்போது அவன் அவள் படைகள் உடைந்தோடுவதையும் அவளும் உடனோடு வதையும் கண்டான். கண்டதே அவன் போரும் மறந்தான். புவியும் மறந்தான்; போர்வீரர் நிலையையும் மறந்து, ஓடுகின்ற தாய்ப்பசுவைப் பின்பற்றும் கன்றைப்போல அவளைப் பின்பற்றி ஓடினான்.

புறங்கொடா வீரனாகிய அவன் மனத்தில் காதற்பேயிருந்து உயிரினும் மிக்க மானத்தையும் உண்டதென்னல் வேண்டும்!

தலைவன் போனபின் படை என்ன செய்யும்? அது நாலாபக்கமும் சிதறி ஸீஸரது படையின் வாளுக்கும், அம்புமாரிக்கும் இரையாகிச் சீர்குலைவுற்றது. மனஞ் சென்ற வழியும் புலன் சென்ற வழியும் செல்லும் அந்தேணியைப் போலாது அம்மனப் போக்கையும் உலகப் போக்கையும் காற்றையும் பூதங்களையும் கூடத் தான் கருதிய அருங்காாயத் திற்குத் துணையாகும் படி தன் கூர் அறிவால் ணைக்கம் ஒப்பற்ற சூழ்ச்சியாளனாகிய அக்டேவியஸ் ஸீஸர் அன்று ஊ ஊழ் எண்ணம் அலையின் உச்சியில் மிதந்து வெற்றி வீரனாய் விளங்கினான்.