பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

5.இறுதிப் போர்

77

உணர்ச்சி வசப்பட்டுப் போரைவிட்டு ஓடிய அந்தோணி எகிப்து சென்றதும் தன் வீரர் அடைந்த படுதோல்வியையும் அழிவையும் கேட்டு மனமுருகினான். அப்போதுதான் அவனுக்குத் தான் அடைந்த தீங்கின் முழு வன்மையும் புலப்பட்டது. படவே இஃதனைத்திற்கும் ஏதுவான கிளியோப்பாத்ராவின் மீது அவன் சீறி விழுந்தான். அன்று அவன் கண்களுக்கு அவள் குற்றங்கள் தெரிந்தன என்று மட்டுமல்ல; அக்குற்றங்கள் பெரிதாக்கப்பட்டும், பல தப்பெண்ணங்கள் சேர்ந்தும், அவள் உடலேபோல் அவள் உள்ளமும் அவன் பார்வைக்குக் கருமையாகத் தோற்றின.ஆகவே, அவளும் தன்னைப் போலவே உணர்ச்சி வசப்பட்டுத்தான் இத்தனை அழிவுகளையும் உண்டு பண்ணினாள் என்று கொள்வதற்கு மாறாக, அவள் வேண்டுமென்றே தன்நலத்தினால் தூண்டப்பெற்ற ஸீஸருக்கு உடந்தையாய் நின்று தன்னைக் கவிழ்க்கத் தொடங்கினாள் என்று சீறினான்.

இன்மொழியால் முகமலரும் மென்மலர்களாகிய நங்கையர் செவிகளில் வன்மொழிகள் புகுந்தால் அவர்கள் துன்பத்தைக் கேட்பானேன்! அவனது சீற்றத்தால் அவன் காதலை இழந்து விட்டோமே என்ற அச்சம் ஒருபுறம்; அவன் தன்னைக் கொல்வதாகப் பாய்ந்தெழும்போது எங்கே தான் அவன் காதலையும் உயிரையும் ஒருங்கே இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஒருபுறமாக நின்று அவளை வாட்டின.

எப்படியும் தன் உயிரைக் காத்துவிட்டால் அவன் சினந்தணித்தபின் அவன் தப்பெண்ணங்களை மாற்றி விடலாம் என்று நினைத்து அவள் ஓடித் தன் இருக்கையறையிற் சென்றொளிந்து கொண்டாள்.

அப்புடியும் அந்தோணி அமையாமல் தன்னைக் கொல்லத் தேடுகிறாப என்று கேட்ட கிளியோப்பாத்ரா தான் இறந்து விட்டதாகவே அவனிடம் கூறிவிடும்படி ஆணையிட்டாள். இத்தந்திரம் முற்றிலும் வெற்றி பெற்றது.

அவள் இறந்தாள் என்று கேட்டது அந்தோணியின் சீற்றமெல்லாம் படமெடுத்த பாம்பு மந்திரத்திலடங்குவது போல் அடங்கி ஒடுங்கிற்று. அவள் எத்தகையவள் ஆயினும் அவளில்லா