பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம்

கரையும் வண்ணம் தன் காதற் கதையையும் காதலனது புறக்கணிப்பின் போக்கையுங் கூறினாள். கேட்ட தயானா அத்தனையும் தனக்கே நிகழ்ந்ததெனத் துடித்துத் தத்தளித்தாள்.

எல்லா வகைகளிலும் தயானா ஹெலெனாவை முற்றிலும் ஒத்து இருந்தாள். ஆனால், ஹெலனா, காதலொளியைக் கண்ணுற்றும் அதன் கொடிய வெம்மையுட் பட்டுக் கருகி வாடிய மலர் போன்றவள். தயானாவோ, காதலின் கடைக்கணிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஒன்றுபோல் ஆளாகாத நறுமலர் போன்றவள். ஹெலெனாவின் கதையைக் கேட்கக் கேட்கத் தயானாவுக்குத் துயர் ஒருபுறம் நேரினும் அத்தகைய துயரினும், ஹெலெனாவைத் தன் வழிப்படுத்த அடிமையாக்கும் அக்காதல் எத்தகைய தென்றும் அத்தகைய காதலை அவளிடம் எழுப்பிய தலைமகன் யாவன் என்றும் அறியும் வேட்கை அதனினும் மிகுந்து நின்றது.

அவ்வேட்கை மிக்க தயானா, மிக்க தயானா, அதற்கேற்பத் தான் அவ்வகையிற் கண்ட ஒரே நிகழ்ச்சயை ெ ஒரே நிகழ்ச்சயை ஹெலெனாவுக்கு எடுத்துக் கூறினான். உயர் நிலையிலுள்ளவனும் அழகு மிக்கவனும் மங்யைர் கருத்தை ஈர்ப்பவனுமான ஓர் இளைஞன், தான் வெறுத்துத் தள்ளினும் போகாமல் தன்னைத் துன்புறுத்து வதையும் அவனிடமோ பிறரெவரிடமோ தனக்கு ஹெலெனாவின் காதலைப் போன்ற உணர்ச்சி எற்படாததையும் அவள் தெளிந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தான்.

பலநாள் இங்ஙனம் உரையாடி வருகையில் இருவரும், தம்மில் ஒருவரைப் புறக்கணிக்கும் காதலனையும், மற்றொருவர் புறக்கணிப்புக்கு ஆளாகுங் காதலனையும் பற்றிப் பலவும் பேசவர். அப்போது ஹெலெனா, அவ்விருவரைப் பற்றிய உரைகளும் பெரிதும் ஒத்திருக்க கண்டு வியந்து ஒருநாள் தயானாவிடம் அவளை நாடிய இளைஞனின் பெயர் என்ன என்று கேட்டாள். அவள் பெர்ட்டிரம் என்று கூறியதும், ஹெலெனா திடுக்கிட்டு, “என்ன, என்ன, பெர்ட்டிரமா? பெர்ட்டிரமா!” என்றாள்.

ஹெலெனாவின் நிலைகண்டு வியப்புற்ற தயானா, “என் ஆரூயிர்த் தோழீ, ஏன், அப்பெயரில் என்ன? அதனால் உனக்கு ஏன் இத்தனை பரபரப்பு?” என்றாள்.

66

"தயானா! இன்னும் அவரைப்பற்றி சற்றுக் கூறு. என் காதலன் பெயரும் அதுவேயாதலால் என் மனம் பதறுகின்றது.”