பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம்

ஹெலெனா தயானாவின் தோற்றத்துடன் அங்க வந்து ஆராக் காதலோடு அவனுடன் அளவளாவி மகிழ்ந்தாள். அம்மகிழ்ச்சி நேரத்தில் ஹெலெனாவின் கணையாழியைப் பெர்ட்டிரம் வாங்கிக் கொண்டான். அதற்கு மாறாக, அவன் தன கணையாழியை ஹெலெனாவிடம் கொடுத்தான்.

அவ்வண்ணமே அரசன் ரூஸிலான் வந்து ரூஸிலான் பெருமாட்டியின் பெருந்துயர்கண்டு தன்னிலை மறந்து கண்ணீர் குத்துக் கதறினான். பின்பு திறனுடைய தூதரையும் ஒற்றரையும் ஏவி,ஹெலெனாவையும்,பெர்ட்டிரமையும் தேடிக் கொணருமாறு பணித்தான். அவன் தூதரும் ஒற்றரும் அவர்களைப் பல நாள் பல இ டங்களினும் தேடினர். இறுதியில் அவர்கள், பெர்ட்டிரமைப் பிளாரென்சில் கண்டு அவ்வூர் அரசன் இணக்கம் பெற்று அனைக் கொண்டு வந்தனர். இச்செய்தி அறிந்த ஹெலெனா, தானும் தயானாவையும் அவள் தாயையும் உடன்கொண்டு நேரே ரூஸிலான் வந்தாள்.

அரசன் பெர்ட்டிரமிடம் ஹெலெனாவைப் பற்றி உசாவிய போது, அவள் உயிருடன் இருக்கிறாளோ மாண்டொழிந்தாளோ தனக்கொன்றுந் தெரியாதென்றும், அவள் இதுவரையில் மாண்டிராவிட்டால் விரைவில் மாளவேண்டுமென்றே தன் மனம் விரும்புகின்றதென்றும், அவள் மாண்டிருப்பின், அதனை அறிந்த மறுநொடியே தான் ன்னொரு மாதை மணஞ் செய்து கொள்ளும்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின் தென்றுங் கூறினான். அரசன், “இன்னொரு மாதென்றது யார்?” என்று கேட்கப்பெர்ட்டிரம், தயானாவைப் பற்றி மொழிந்து, அவளுடன் தான் ஏற்கெனவே உளமுவந்து களவியல் முறையில் மணஞ் செய்து கொண்டதாகவுந் தெரிவித்தான்.

அரசன் பெர்ட்டிரமிடம் எல்லையற்ற சினங் கொண்டா னாயினும்,ஹெலொனவின் செய்தியறியாது எதுவுங் கூறமுடியாத நிலைமையிலிருந்தான்.

அப்போது, ஹெலெனாவே முன்வருவது கண்டு, அரசன் எல்லையற்ற மகிழ்ச்சியோடு அவளை எதிர்கொண்டு அழைத்தான். உடனே அவளைப் பெர்ட்டிரமிடம் அழைத்துச் சென்று அவளை ஏற்றுக் கொள்ளும்படி கூறப் பெர்ட்டிரம், தான் மனம்