பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

95

கலந்து நேசிக்கும் மங்கையையன்றி, வேறு யாரையும் ஏற்க முடியாதென்றும், வேண்டுமானால் தான விரும்பிய மாதை மணக்கும் உறுதியுடன் இவள் இறக்கும் வரைக்குங் காத்திருக்கத் துணிந்து விட்டதாகவும் கூறினான்.

அரசன் சினங்கொண்டு, 'இனி இவன் இறப்பதே நன்றென்று பெர்ட்டிரமை வீழ்த்தபுகும் எல்லையில் அவன் கையிற் சிடந்த கணையாழி அரசன் கண்களுக்குப் புலப்பட்டது. “இது நான் ஹெலெனாவுக்குக் கொடுத்த கணையாழி அன்றோ! இஃது உன் கையில் எப்படி வந்தது? கூறுக” என்று கேட்க, அவன் திகைத்து மிரள மிரள விழித்தான்.

66

அந்நேரத்தில் ஹெலெனா இடையிட்டுப் பொட்டிரமிடம் தனக்கு ஒரு வழக்கிருக்கின்ற தென்று கூறினாள். ஹெலெனா என்ன சொல்லப் போகிறாள் என்று பெர்ட்டிரம் அவள் பக்கம் திரும்பியதும் அவள் தன்கையில் அணிந்திருந்த பெர்ட்டிரமின் கணையாழியை அவனிடம் காட்டி, “இதனை நான் பெறுகின்ற நாளே தம் காதலைப் பெறும்நாள் என்று முன்பு மொழிந் திருக்கின்றீர்; அவ்வாறே, கணையாழியைப் பெற்றேன்; தம் காதலையும் பெற்றவாளானேன்; இப்போதுயாது கூறுகின்றீர்” என்று தீர்ந்த குரலில் தனது வழக்கை எடுத்துரைத்தாள்.

பெர்ட்டிரம் அது கேட்டு, நிகழ்ந்தது இன்னதென்றறிய இயலாமல் திடுக்கிட்டு, “இது நான் என் காதலிக்கன்றோ கொடுத்தது! நீ திருடியோ, அல்லது கொலை செய்தோதான் இதனைக் கவர்ந்திருக்க வேண்டும்; அப்படியாயின், உன்னை எளிதில் விடேன்.” என்றான்.

ஹெலெனா, “அரசே, ஏழையாயினும் யான் திருட்டும், கொலையும், கொள்ளையும் அறியேன்; இச்செல்வர் என் உள்ளம் கொள்ளை கொண்டவர். போதாதென்று என் தோழி ஒருத்தியின் காதலைத் திருட்டாற் பெறவும், அவள் கற்பைக் கொள்ளை கொள்ளவும் முயன்றுள்ளார்,” என்று கூறி, மறைந்து நின்ற தயானாவையும் அவள் தாயையும் வெளியே வருவித்து அவர்கள் மூலம் கணவன் குறிப்பிட்ட களவியல் மணம் அவன் நினைத்தபடி வேறொரு மாதுடனன்று; தன்னுடனேயே நிகழ்ந்தது என்பதை விளக்கினாள்.