பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

99

பிள்ளைகளும் ஒருங்கே வந்த குழப்பமும் தற்செயலாய் நீங்க, அனைவரும் மகிழ்ந்தனர். இளைய அந்திபோலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பனிப்பெண்ணின் தங்கையையும் மணந்தனர்.

1. குடும்பப்பிரிவு

1ஸைரக்கூஸ் என்ற நகரில் 2ஈஜியன் என்று ஒரு செல்வன் ருந்தான். தொழிலை ஒட்டி, அவன் சில காலம் அயல்நாடு சென்று வாழவேண்டியிருந்தது. அப்போது அவனுக்கு, ஒரே அச்சில் வார்த்தவர் போன்ற இரண்டு புதல்வர் பிறந்தனர். பெயரிலும் வேற்றுமை இல்லாதபடி ஈஜியன் அவ் விருவரையும் 3அந்திபோலஸ் என்றே அழைத்தான்.

அப்புதல்வர்கள் பிறந்த அரே நேரத்தில் அந்நகர் விடுதியில் ஓர் ஏழை மாதினுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களும் ஒரே சாயலும் தோற்றமும் உடையவரா யிருந்தனர். அவர்கள் தாய் அவர்களுக்கும் 4துரோமியோ என்று ஒரே பெயரிட்டு அழைத்தாள். அவள் மிகவும் ஏழை யானதனால் அவர்களைத் தானே வளர்க்க முடியாமல் ஈஜியனிடம் ஒப்படைத்தாள். ஈஜியனும் அவ்விருவரையும் தன் பிள்ளைகளின் பணியாளாராக வைத்து வளர்த்து வந்தான்.

இரு அந்திபோலஸ்களும் இரு துரோமியோக்களும் சிறுவராயிருந்தபோது பெற்றோர், தம் தாய் நாட்டுக்குப் போகப் பயணமாயினர். ஆனால் காலக்கேட்டினால், வழியில் அவர்கள் ஏறிச்சென்ற கப்பல் புயலிற்பட்டு நொறுங்கி விட்டது. கப்பலில் இருந்தவருள் ஒரு சிலர் மட்டுமே படகுகளில் தப்பினர்.

ஈஜியனும் அவன் மனைவியும் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவரவர் பணிப்பிள்ளைகளுடனே சேர்த்து இரண்டு மரத்துண்டுகளில் கட்டி மிதக்க விட்டார்கள். பின் தாங்களும் தனித்தனியாகப் பாய் மரத்தில் மிதந்து மிதந்து தப்ப முயன்றனர்.

காற்றும் அலையும் அடிக்கும் வழியிற் சென்று எல்லோருமே பிழைத்தனர்.ஆயினும் ஒருவர் பிழைத்ததை இன்னொருவர் அறிய முடியவில்லை.