பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம்

ஊழ்வலியால் இங்ஙனம் சிதறிய அக்குடும்பத்தினரைப் பல ஆண்டுகள் கழித்து அதே ஊழ்வலி 5எபீஸஸ் என்னும் நகரில் வேறு வேறாகக் கொண்டு வந்து சேர்த்தது. அனைவருக்கும் பிறர் உயிர் பிழைத்தது தெரியாதது போலவே, அனைவரும் ஓர் இடத்தில் வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது. அதன் பயனாக அவர்கள் பலவகையான இக்கட்டுக் களுக்கும் குழப்பங்களுக்கும் ஆளாயினர்.

அவர்கள் அனைவரிலும், முதன் முதலாக எபீஸஸ் வந்தவர் ஈஜியன் மனைவியும், மூத்த அந்திபோலஸும் அவன் பணியாளான மூத்த துரோமியோவுமேயாவர். அவர்கள் அந்நகரத்துச் செம்படவர் சிலரால் கடலிலிருந்து காப்பாற்றப் பட்டனர். சிறுவர் இருவரையும் தாயினிடமிருந்து பிரித்து அச்செம்பவர் பிறர்க்கு அடிமைகளாக விற்றுவிட்டனர்.

மக்களை இழந்த தாய் மனமுடைந்து, நகரெங்கும் பித்துக் கொண்டவள் போல் அலைந்தாள். அப்போது துறவி ஒருவர் அவளுக்குமெய்யறிவு புகட்ட, அவள் ஒருவாறு மனந்தெளிந்துனுரு மடத்தில் இறைவன் பணியில் ஈடுபட்டாள். அவள் மனத் தூய்மையைக் கண்ட மடத்துத் துறவிமாதர் அவளையே அம்மடத்தின் தலைவியாக்கினர்.

ஈஜியன் மக்களை விலைக்கு வாங்கியவன், நகர்த் தலைவனுக்கு உறவினனும் பெருவீரனுமாகிய 'மெனேபோன் கோமகனே. அவன் மூத்த அந்திபோலஸின் பெருமிதத் தோற்றத்தைக் கண்டு அவனைப் படையில் ஒரு பணியாளனாகச் சேர்க்கும்படி நகர்த் தலைவனைத் தூண்டினான்.

படை வீரரான அந்திபோலஸ், தனது வீரத்தாலும் நற்குணத்தாலும் மிகவும் மேம்பாடெய்தி இறுதியில், தனக்கு உதவி செய்தமெனெபோன் கோமகன் உயிரையும் காப்பாற்றினான். அதன் பயனாக நகர்த்தலைவன் அவனையே தன் படைத் தலைவனாக அமர்த்திக் கொண்டான். அதுமுதல் மெனேபோன் கோமகன் அவனைப்பின்னும் அருமையாகப் பாராட்டித் தன் மருகியாகிய "அதிரியானாவை அவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான்.