பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம்

102 || மனைவியையும் மகனையும் தேடி அழைத்துக் கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் ஈஜியன் சிலகாலம் கழித்தான். நாளாக ஆக அந்நம்பிக்கையும் மறையலாயிற்று. இறுதியில் அவன் பொறுமை இழந்து, முதலிற் காணாமற் போனவரையும் பின்பு அவர்களைத் தேடிச் சென்றவரையும் சேர்த்துத் தானே சென்று கண்டுபிடிப்பதெனத் துணிந்து புறப்பட்டான்.

2. ஈஜியன் துயர்

ளைய அந்திபோலஸை எபீஸஸ் பக்கம் இழுத்துச் சென்ற அதே ஊழ், ஈஜியனையும் அந்நகரின் பக்கமே கொண்டு வந்து சேர்த்தது.

எபீஸுஸுக்கும் ஸைரக்கூஸிற்கும் இடையில் பகைமை உண்டு என்பதை ஈஜியன் மறந்து ஸைரக்கூஸர் உடையிலேயே நகரில் புகுந்து விட்டான். ஆகவே நகர்க் காவலர் அவனைப் பிடித்துக்கொண்டு போய் நகர்த் தலைவன் முன் நிறுத்தினர்.

தலைவன் ஈரநெஞ்சினனாயினும் நடுநிலை பிறழாதவன். ஆதலால் ஈஜியினின் ஆண்டு முதிர்ச்சியைக் கண்டு பரிவுற்றானாயினும், நகர்ச் சட்டத்தைத் தவிர்க்கக் கூடாமல் ஆயிரம் வெள்ளி தண்ட வரி செலுத்த வேண்டும்; அன்றேல் அவன் தலையிழத்தல் வேண்டுமெனத் தீர்ப்பளித்தான்.

ஈஜியன் தன் துயரமிக்க வரலாறு முற்றும் நகர்த் தலைவனுக்கு எடுத்துரைத்தான். அதுகேட்டு மனமிரங்கிய அத்தலைவன், தண்டனையை நிறைவேற்ற மாலை வரையில் தவணை கொடுக்கக் கூடுமென்றும், அதற்குள் நகரில் நண்பர் எவரேனும் இருந்தாற் கண்டுபிடித்து ஆயிரம் வெள்ளியைக் கொடுத்து உயிர் பிழைக்கலாமென்றும் கூறினான்.

ஈஜியன் இத்தீர்ப்புக் கேட்டு, அன்றே தன் உயிர் அகன்றதென்று கருதினான். ஆயினும், மாலைவரையில் நேரமிருக்கின்றது. ஒருகால் அதற்குள் இறையருள் ஏதேனும் வழிகாட்டுதலுங் கூடும் என்ற நம்பிக்கையுடன் சுற்றிச் சுற்றி அலைந்தான். மாலை அணுக அணுக அச்சிறு நம்பிக்கையும் வறண்டு போயிற்று.