பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அப்பாத்துரையம்

வெள்ளையறிவினளாகிய அதிரியானா, அவன் மேலீடாகக் கூறிய இச்சின மொழிகளை அப்படியே மெய்யெனக் கொண்டு மனமுளைந்தாள். இன்று, அதற்கேற்ப, அந்திபோலஸ் வேளையில் வீட்டுக்கு வரக் காலந் தாழ்த்தது கண்டு, அவள் தன் கணவன் தன்னிடம் சொன்னபடியே தான் தன்னை விட்டு விட்டானோ என்று மிக்க அச்சங்கொண்டாள். எனவே, அவள் தன் பணியாளாகிய மூத்த துரோமியோவை அழைத்துத் தன் கணவனைத் தேடிக்கொண்டு வரும்படி அனுப்பினாள்.

துரோமியோ தன் தலைவனைத் தேடிக்கொண்டு போகும்போது, வழியில் இளைய அந்திபாரஸைக் கண்டான். கண்டு அவன் தன் தலைவனே என்று எண்ணிய துரோமியோ, தலைவி அழைக்கின்றாள் என்று கூறி வீட்டுக்கு இழுத்தான். ஆனால், அவ்வந்தி பொலஸ், இத்துரோமியோவைத் தன் பணியாளாகிய துரோமியோவே எனக் கருதி வெகுளியுடன், “என்னிடம் ஏன் நகையாடுகிறாய்? எனக்குத் தலைவியுமில்லை, கொலைவியுமில்லை; ஏன் தொந்தரவு செய்கிறாய்?" என்று சீறினான். துரோமியோ போகாமல் பின்னும் பசுப்புவது கண்டு, அவனை அந்திபோலஸ் நையப்புடைத் தனுப்பினான்.

துரோமியோ அழுதுகொண்டு தலைவியினிடம் வந்து, "அம்மணி, தங்கள் கணவர், நான் போய் அழைத்ததும் கடுஞ்சினங் கொண்டு என்னை அடித்துத் துரத்திவிட்டார். மேலும், அவர் 'எனக்குத் தலைவியுமில்லை, கொலையுமில்லை' என்று வெறுத்துரைக்கிறார்" என்று கூறினான். அதைக் கேட்டதும், அதிரியானாவின் மனக்குழப்பம் முன்னையினும் பன்மடங்கு மிகுதியாயிற்று. உணர்ச்சிச் சுழலிற்பட்ட அவள், மனம் பதைத்துத் தன் கணவனைச் சீற்றந் தணித்து அழைத்து வரத் தானே புறப்பட்டாள்.

துரோமியோ கூறிய குறிப்பைப் பின்பற்றி அதிரியானா ஒரு பணிப் பெண்ணுடன் இளைய அந்திபோலஸ் இருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தாள். துரோமியோவைப் போலவே அவளும் அவனைத் தன் கணவன் அந்திபோலஸே என்ற நினைத்தாள். ஆகவே, அவள் அவனைத் தன்னுடன் வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி வேண்டினாள். அந்திபோலஸ் உண்மையில் அவள் யார் என்றே அறியாதவனாதலின், ஒன்றும் விளங்காது