பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

107

என்று துணிவாகக் கூறினான். இருவரும் வாதாடினார் காவலர், இருவரையும் சிறைப்பிடித்து நகர்த்தலைவனிடம் அழைத்தேகினர்.

இங்ஙனம் சிறை செல்லுதல், தன் உயர்நிலைக்குத் தகாதென அந்திபோலஸ் எண்ணினான். ஆகவே தான் வழியில் கண்ட இளைய துரோமியோவைத் தன் பணியாள் என்று நினைத்துத் தன் மனைவியிடம் சென்று தான் விடுதலை பெறுவதற்கான பொருளை உடனே வாங்கிவரப் பணித்தான்.

"

துரோமியோ அந்நேரத்தில் உண்மையில் தன் தலைவனாகிய ளைய அந்திபோலஸைத் தேடிக்கொண்டு வந்தான். ஏனென்றால், அவர்கள் இதற்குமுன், 'பித்தர் போன்று நடக்கும் மக்களையுடைய இம்மாய நகரை விட்டு உடனே நீங்கவேண்டு என்று உறுதி செய்திருந்தனர். ஆதலால், இளைய அந்திபோலஸ், கப்பல் புறப்படும் நேரத்தை அறிந்து வரும்படி தன் துரோமியோவை வெளியே அனுப்பியிருந்தான். கப்பல் ஒன்று அன்றே புறப்பட இருந்ததை அறிந்த துரோமியோ. அதை அறிவிக்கத்தான் தன் தலைவன் அந்திபோலஸை நாடி வந்தான். ஆனால் தன் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாத மொழிகளை அவன் இப்போது பகர்ந்தது கேட்டு துரோமியோ, பெரிதுங் குழப்பமுற்றான்.

ஆயினும், 'பணியாளுக்குரிய கடன் காரிய காரண ஆராய்ச்சியன்று; கட்டளைப்படி நடப்பதேயாம்' எனத் துணிந்து, அவ்வந்திபோலஸைக் கணவன் என்று உரிமை பாராட்டிய அதிரியானாவின் வீடு சென்று நிலைமையைத் தெரிவித்துப் பணம் கேட்டான். கணவனிடம் எல்லையற்ற பற்று வைத்திருந்த அதிரியானா, உடனே பதைத்துக் கொண்டு தானே பணத்தைக் கொடுத்தனுப்பினாள்.

துரோமியோ அப்பணத்தைக் கொண்டு செல்கையில் இளைய அந்திபோலஸைக் காணவே, அவன் ‘நம் தலைவன் இதற்குமுன் காவலிலிருந்தானே; எப்படி வெளிவந்தான்' என்ற வியப்புடன் பணத்தை அவன்முன் வைத்தான். பணம் ஏது என்று அந்திபோலஸ் கேட்க, அவன், “நீங்கள் கேட்டுவிட்டபடியே உங்களைக் கணவர் என்றழைத்த அம்மாது தான் கொடுத்தாள்” என்றான்.