பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110 ||

அப்பாத்துரையம்

அமைந்திருந்தது. மாலை வரையில் நண்பர் எவரையுங் காணாமையால் தண்டவரி செலுத்த வகையில்லாத ஈஜியனைக் காவலர் கொலைத் தண்டனைக்காக அம்மேடைக்குள் கொண்டு வந்தனர். அவனுடன், அத்தண்டனையை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றும் பொறுப்பை ஏற்று நகரத் தலைவனும் வந்தான்.

இதே நேரத்தில், சிறையில் வைக்கப்பட்ட மூத்த அந்திபோலஸ் தன் உயர் நிலையின் உதவியால் சிறைக் காவலனை அச்சுறுத்தி விலக்கி விட்டுத் துரோமியோவுடன் அத்தலைவன் முன் வந்து, தமக்கு நகரில் நேர்ந்த பலவகை இன்னல்களையுங் கூறி, 'இவையனைத்தும் யாரோ எதிரிகளின் மயாமாயிருக்க வேண்டும்' என்று மன்றாடினான். தலைவன், அஃது இன்னதென்று அறியாது குழப்பமுற்றாள்.

ளைய

ஊழ்வலியால் இத்தறுவாயில், மடத்தலைவியாக ஈஜியன் மனைவி, இளைய அந்திபோலஸையும் துரோமியோவையும் அதிரியானாவுடனும் பணிப்பெண்ணுடனும் கூட்டிக் கொண்டு வந்து தன் மடத்தின் முன் நடந்தவை அனைத்தும் புகன்றாள். இதற்குள், அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் தத்தம் கணவர் உருவுடன் ஒருவருக்கிருவர் நிற்பது கண்டு எல்லையில்லா வியப்பும் விழிப்பும் அடைந்தனர். நகர்த் தலைவனும் அவர்களைக் கண்டு, “இஃதென்ன, இவர்கள் வடிவும், அதன் நிழலும் போல ஒத்து நிற்கின்றனரே; இவர்கள் இருவரோ ஒருவரோ” என மலைவுற்றான்.

அப்போது திருமடத் தலைவியின் உள்ளத்தில் ஒரு பேரொளி உண்டாயிற்று. அவள் இரு அந்திபோலஸ்களையும் வாரி எடுத்து, “ஆ, நீங்கள் என் பிள்ளைகள் அல்லிரோ” என்று அழுதாள். ஈஜியனும் தன் துயரமெல்லாம் மறந்து தானே பிள்ளைகளின் தந்தை எனக் கூறிக் கொண்டு ஓடிவந்து, அருகிருந்து இன்பக் கண்ணீர் உகுத்தான்.

மடத்தலைவி, இரு அந்திபோலஸ்களும் ஒரே உருவுடைய தம் இரு பிள்ளைகள் என்றும். உடன் இருக்கும் ஒரு ரு துரோமியோக்களும் அங்ஙனமே பணிமாது ஒருத்தி பெற்ற

ரட்டைப் பிள்ளைகள் ஆவர் என்றும் கூறி, ஈஜியன் தன்னை