பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. ஜூலியஸ் ஸீஸர்

கதை உறுப்பினர் ஆடவர்:

1. ஜூலியஸ் ஸீஸர்: ரோமின் ஒப்பற்ற வெற்றி வீரன்; படைத் தலைவன் - பொது மக்கள் மனங்கவர்ந்த முடிசூடா மன்னன்-கிளர்ச்சிக் காரரால் கொலையுண்டவன்.

2. அந்தோணி: வீரன், ஆனால் இன்ப வாழ்வினன், கேளிக்கை விருப்பினன்-ஸீஸர் நண்பன்-நாத்திறமிக்க பேச்சாளி- கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.

3. காஸியஸ்: ஸீஸரைக் கொல்ல முயன்ற கிளர்ச்சிக் காரருள் முதல்வன்-அரசியல் சூழ்ச்சி அறிந்தவன்.

4. புரூட்டஸ்: ஸீஸர் நண்பன்-உயர் குடியாளன்-தன்னலமற்ற உயர் நெறியாளன்-காஸியஸின் தூண்டுதலால் கிளர்ச்சிக்காரர் தலைவனானவன் -அரசியல் சூழ்ச்சியறியாதவன்.

5. அக்டேவியஸ் ஸீஸர்: ஜூலியஸ் ஸீஸர் மகன்-சூழ்ச்சித் திறத்தால் அந்தோணியையும் பிறரையும் இயக்கிக் கிளர்ச்சிக் காரரை ஒடுக்கியவன்.

6. லெப்பிடஸ்: அந்தோணிக்கும் அக்டேவியஸுக்கும் துணைதந்து கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.

பிற கிளர்ச்சிக்காரர்கள்

7.காஸ்கா

8.ஸின்னா

9. திரேபோனியஸ்

10. மெதல்லஸ் ஸிம்பர்