பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம்

1. குடியரசும் முடியரசும்

2ரோம் 3இத்தாலியின் தலைநகரமாகும். இத்தாலி பண்டைக் காலத்தில் ஒரு குடியரசு நாடாக இருந்தது. ஆனால் பெயரளவில் அதன் ஆட்சி பொதுமக்கள் சார்பாயிருந்த போதிலும், உண்மையில் 'பத்சிரீயர் என்று வழங்கப்பட்ட பெருமக்களே அங்கே எல்லா வகையான உரிமைகளையும் கையாண்டு வந்தனர். 5பொதுமக்கள் வரவர விழிப்படைந்து தொகையிலும் ஆற்றலிலும் மிகுந்து வந்தபோதெல்லாம் பெருமக்கள்,பொதுமக்கள் இவ்விருதிறத் தினரிடையே அடிக்கடி பூசலும் போட்டியும் நிகழ்ந்துவந்தன.

ரோம்நகர் நாளடைவில் இத்தாலியையும் அந்நாளைய நாகரிக உலகின் பெரும் பகுதியையும் வென்றடக்கி உலகப் பேரரசாக விளங்கிற்று.அப் பேரரசை நிலைநாட்ட உதவிய பெரிய வீரர்களுள் ஜூலியஸ் ஸீஸூரே முதன்மையானவன். அவன் கல்லியா 'பிரித்தானியா முதலிய பல நாடுகளை வென்றடக்கி அவற்றின் குறுநில மன்னர்களைச் சிறை பிடித்ததோடு அவர் களிடமிருந்து கணக்கற்ற பொருளைத் திறையாகவும் பெற்றான்.

அவன், தன் வெற்றிகளைப் பகட்டாகக் கொண்டாடியும், பொது மக்களுக்கும் அவர்கள் தலைவர்களுக்கும் தான் திறையாகப் பெற்ற பொருளை வாரி இறைத்தும் அவர்கள் மனத்தைக் கவர்ந்தான். இவ்வகையில் அவனுக்கு உடனிருந்து வலக்கை என உதவியவன் மார்க்கஸ் அந்தோணி என்பவன். இவ்வந்தோணியும் நண்பர்களும் இன்னும் சிலரும் பொது மக்களின் துணைகொண்டு ஸீஸரைப் பேரரசராக்கி முடிசூட்ட வேண்டுமென்று முயற்சியில் முனைந்தனர்.

இங்ஙனம் பொதுமக்கள் துணை ஸீஸருக்கு மிகுந்து வரவர, அவன்,பெருமக்கள்பால் அசட்டையாயிருக்கத் தொடங்கினான். முன் இருந்த தலைவர்களைப் போல் அவன் அவர்களுக்குத் தனி