பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

11

உயர்வும் தனி உரிமைகளும் கொடுப்பதில்லை. இதைக் கண்டு அப்பெரு மக்களுட் பலர் அவனை வெறுத்தனர். சிலர் அவனுடைய வெற்றிகளையும் புகழையும் கண்டு அவன் மீது பொறாமை கொண்டனர். அத்தகைய பகைவருள் 'காஸியஸ் என்பவன் ஒருவன். அவன் மக்களின் நடையையும் உள்ளப் போக்கையும் அறிவதிலும் அவர்களை இயக்கி நடத்துவதிலும் அருந்திறனுடையவன்.ஆகவே ஸீஸரை யார் யார்வெறுப்பவர்கள் என்று கண்டு, அவர்களை அவன் ஒரு கட்சியாகத் திரட்ட முயற்சி செய்துவந்தான். ஆண்டுதோறும் அந்நகரில் நிகழ்ந்து வந்து நகரக் கால்கோள்விழா இவ்வகையில் அவனுக்கு மிகவும் உதவியா யிருந்தது.

அவ்வாண்டு விழாவின்போது ஸீஸர் அந்தோணியுடன் கவலையற்று அவ்விழாக் கூட்டத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தான். அந்தோணி ஒருவனே அன்று அவனுடன் நெருங்கி உறவாட முடிந்தது. பிறரையெல்லாம் 10‘காஸ்கா' என்ற ஒருவன் அவர் பக்கம் வராதபடி அடித்துத் துரத்தினான். அது கண்டு பலருக்கும் முகம் சிவந்ததைக் காஸியஸ் கவனித்தான்.

அவன் பார்வை சிறப்பாக "மார்க்கஸ் புரூட்டஸ் என்பவன் மீதே சென்றது.

மார்க்கஸ் புரூட்டஸ், ரோமின் மிகப் பழைய பெருங்குடி ஒன்றைச் சேர்ந்தவன். ரோமில் முடியாட்சியை வீழ்த்திக் குடியாட்சியை நிறுவிய பெருந்தலைவனாகிய ஜூனியஸ் லூசியஸ் புரூட்டஸின் வழிவந்தவன்.ஸீஸரும் அவனும் தமக்குள் அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். அப்படியிருந்தும் ஸீஸருடைய அரசியலின் போக்கில் அவனுக்கு விருப்பமில்லை. ஏழு நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்த குடியாட்சியை அழித்து ஸீஸர் முடியரசை நிறுவ முயல்வது அவனுக்குத் தாங்கமுடியாத துயரைத் தந்தது. எனவே நட்பு ஒருபுறமும் கொள்கை ஒரு புறமாக அவன் மனத்தகத்தே போராடின.

விழாநாளன்று அவன் ஸீஸரது தற்பெருமையையும், ஸீஸருடைய நண்பர்களது சிறுமையையுங் கண்டு தனது களங்கமற்ற முகத்தில் வெறுப்பும் ஏளனமுந் தோன்றப் புன்முறுவல்கொண்டு நின்றான்.