பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

15

பற்றி அவன்மேற் சாய்ந்தாள். அவளது இதயத்துடிப்பு அவன் தோள்களிலும் துடித்தது. அவனும் உள்ளூரச் சற்றே துணுக்குறினும், தன் மனைவிக்கும் பிறர்க்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் வலியப் புன்முறுவலை வருவித்துக்கொண்டு, “அவன் ஒரு பித்தன் போலும்! அவன் சொற்களை ஒரு பொருட்டாக எண்ணுவார்களா?” என்றான்.

காஸியஸ் அக்கூட்டம் தன்னைக்கடந்து செல்லும் அந்நேரத்திலேயே, அதனிடையே முன்னைய எழுச்சியின்றி ஒதுங்கி நடந்துவரும் காஸ்காவைத் தன் பக்கமாகச் சட்டையைப் பிடித்திழுத்து நிறுத்திக் கொண்டான். அவன் மூலமாகக் காஸியஸ் அன்று கூட்டத்தில் நடந்தவையனைத்தையும் அறிந்து கொண்டதன்றி, அவன் ஒரு நல்ல சமயசஞ்சீவி என்பதை உணர்ந்து அவனிடம் பக்குவமாகத் தன் எண்ணங்களைத் தெரிவித்துத்தனது கிளர்ச்சித் திட்டத்துக்கு அவனை உடந்தையாக்கிக் கொண்டான்.

விழாக்கழிந்த சில நாட்களுக்குள்ளாக அவ்விருவர்

முயற்சியாலும் 14திரெபோனியஸ், 15தெஸிமஸ் புரூட்டஸ், “ஸின்னா,”மெதெல்லஸ் ஸிம்பர் முதலிய இளைஞர் பலர் அவர் களுடன் சேர்ந்தனர்.இவர்கள் அனைவரும் காஸியஸ் குறிப்பறிந்து துணிகரமாக எச்செயலையும் செய்ய இறங்குபவர்களே ஆயினும் பொதுமக்கள் மதிப்பையும் அன்பையும் பெறும் வகையில் காஸியஸாயினும் சரி, அவனைச் சேர்ந்தவர்களாயினும் சரி, மிகவும் குறைபாடுடையவர்களாகவேயிருந்தனர். ஆகவே எப்பாடு பட்டாயினும் புரூட்டஸின் தலைமைக்காக உழைக்க வேண்டுமென அனைவரும் முடிவு கட்டினர்.

ஆனால் தன்னலமும் வகுப்பு வேற்றுமை உணர்ச்சியும் அழுக்காறும் நிறைந்த அக்கிளர்ச்சிக்காரரது திட்டத்தில் ஒழுக்க நெறியாளனாகிய புரூட்டஸைச் சேர்ப்பது எப்படி? நாட்டுப்பற்று, விடுதலைப்பற்று ஆகிய இரு பேருணர்ச்சிகளின் உதவியாலேயே அவனை இயக்க முடியும் என்று அவர்கள் அறிந்துகொண்டனர். அதன்படியே அவர்கள் அவனது தலைமையை நாடிப் பொதுமக்கள் எழுதியதுபோல் பலகையெழுத்துக்களில் பல மொட்டைக் கடிதங்கள் வரைந்து வரைந்து அவன் அவன் வீட்டிலும் தோட்டத்திலும் அவன் நடமாடும் இடங்களிலுமாக அவன் கண்களில் படும்வண்ணம் போட்டு வைத்தனர். நேரிலும் அவர்கள்