பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

17

உடலைச் சுற்றி அவனையும் அறியாமல் தீ எரிந்ததாம். போதாக்குறைக்கு அன்றிரவு புயலும் மழையும் மின்னலும் இடியும் அதுவரை எவரும் கண்டுங் கேட்டும் அறியாத வகையில் கலந்துகொண்டு கலங்காத நெஞ்சினரையுங் கலங்கவைத்தன. அவற்றிடையே நாய் போன்றும் நரிபோன்றும் கூகைகள் போன்றும் காளிகளும் கூளிகளும் குறளிகளும் மயிர்க்கூச்செறியும் வண்ணம் ஊளையிட்டுக் கத்தினவாம். அறிவிலும் ஆராய்ச்சி யிலும் சிறந்த அறிஞர்கள் கூட இவற்றைப் பார்த்துவிட்டு, "இவை ஏதோ பெரிய உலக மாறுதல்களுக்கு அறிகுறியாகத் தான் இருக்க வேண்டும்,” என்று கருதினார்கள்.

மிக நுண்ணிய இயக்கங்களும் கற்புடைய மாதரின் மனத்தில் அதிர்ச்சியை உண்டாக்கும் என்பர். அதன்படி புரூட்டஸின் மனைவியாகிய போர்ஷியாவும் ஸீஸரின் மனைவியாகிய கல்பூர்ணியாவும் அன்றிரவு தீக்கனாக்களால் துயிலின்றி வருந்தினர்.போர்ஷியா புரூட்டஸைப் போன்றே ஒப்பற்ற நாட்டுப் பணியாளராகிய 8கதோவின் புதல்வியாவள். ஆகவே அவள் தான் பெண்ணாயினும், வீரர் புதல்வி என்ற முறையிலும் வீரர் துணைவி என்ற முறையிலும் புரூட்டஸின் மனத்தை அரிக்கும் உண்மைகளை அறிந்து அவன் கவலைகளில் பங்ககொள்ள வேண்டுமென்று வாதாடினாள்.புரூட்டஸ் அவளுக்கு இணங்கி, அன்று நிறைவேற்ற இருக்கும் தன் திட்டத்தை அவளுக்குக் கூறினான்.

ஆனால் கல்பூர்ணியாவுக்கு அதுபோலத் தன் கணவனைத் தன் மனப்படி திருப்ப முடியவில்லை. அவள் தன் கணவன் உருவத்தின்மீது பல ரோமப் பெருமக்கள் உடைவாளாற்குத்தி அவன் குருதியிற் கைதோய்த்தனர் எனக் கண்டு அலறி எழுந்து அரசியல் மன்றத்திற்குப் போகப் புறப்பட்டு நிற்கும்-அவனை அன்று எங்கும் வெளியே போகவேண்டாமென்று தடுத்தாள்; விதி வழியே செல்லும்அவன் மனம், அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் அவளுக்கு அமைதி கொடுக்கும் வண்ணம், நகர்க்கோவிலுக்கு ஆடு ஒன்று பலியிட்டு நற்குறியறிந்துவரும்படி ஓர் ஆளை அனுப்பினான். இதுவும் அவனுக்கு நற்குறி தரவில்லை. பலியிட்ட ஆட்டில் இதயம் காணப்படவில்லை என்று கூறப்பட்டது. தனது காரியத்திற்கேற்ப அவன் அதற்குப் பொருள்கொண்டு, “வானவர் இன்று நான்