பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம்

இதயமற்ற கோழையாய் விட்டேன் எனக்கேலி செய்கின்றனர் போலும்” என்றான்.

சற்று நேரத்திற்குள் கிளர்ச்சிக்காரருள் ஒருவனாகிய தெஸிமஸ் புரூட்டஸ் அங்கே வந்து, அவன், அன்று வெளியே போவதைக் கல்பூர்ணியா தடுப்பதையும் அவன் தயங்குவதையும் கண்டதே அவன் மனம் சுறுக்கென்னும் படி, “பாராளும் ஸீஸர் ஒரு பாவை சொல்லுக்கிணங்கி அரசியல் மன்றத்தில் தன்கடனாற்ற மறுத்தால் உலகம் சிரிக்கும்,” என்றான். அதுகேட்டு ஸீஸர் கல்பூர்ணியா பக்கம் பாராமலே அவள் பிடியை உதறிக்கொண்டு புறப்பட்டான்.

அன்று பின்னும் இரண்டு தடவை அவனது பழைய நல்வினை அவனுக்கு எச்சரிக்கையாக வந்தது. ஆனால் அவனது தீவினையே அதனினும் மேம்பட்டு நின்று அவனுக்குத் துணிவைத் தந்தது என்னல் வேண்டும். முதலாவது, வழியில், விழாவன்று வந்த ஆண்டி மீண்டும் வந்து நின்றான். ஸீஸர் அவனைப் பார்த்து, உன் நடுநாள் வந்துவிட்டதே, உன் முன்னறிவு இப்போது என்னாவது?" என்று கேட்டான். அவன் அமைதியுடன், “ஆம்; நடுநாள் வந்துவிட்டதுதான்; ஆனால் அது போய்விடவில்லையே” என்றான்.

66

ஸீஸரின் நண்பன் அவனை முடிமன்னராக்கக் குறித்து வைத்திருந்த கூட்டமே அவன் எதிரிகளால் அவனைக் கொலை செய்து ரோமக் குடியரசைக்காக்கவுங் குறித்து வைக்கப் பட்டிருந்தது. இதனை எப்படியோ அறிந்தனன் ஸீஸர் நண்பர்களுள் ஒருவனான அர்த்தெமிதோரஸ் என்ற வழக்கறிஞன். ஸீஸருக்கு அதைக்சொல்ல நேரமும் இடமும் வாய்க்காமல், இக்கூட்டத்திலேயே அவனிடம் அதனைக் கடித வாயிலாகத் தெரிவித்து விட வேண்டுமென்று கருதிக்கொண்டு வந்திருந்தான்.

ஸீஸரை அண்டிக் குறையிரப்போர் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அவருள் கிளர்ச்சிக்காரருள் ஒருவனான மெதெல்லஸ் ஸிம்பரும் இருப்பதை அவன் கண்ணுற்றான். இவன் நாடுவிட்டுத் துரத்தப்பட்ட தன் உடன்பிறந்தநாளை மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டப்போனான். அப்படி வேண்டும் சமயத்தையே கிளர்ச்சிக்காரர் தம் கருத்தை நிறைவேற்றும் நேரமாக முன்னேற்பாடு செய்திருந்தது.