பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

19

அர்த்தெமிதோரஸுக்குத் தெரியும். ஆகவே, மெதெல்லஸ் ஸிம்பருக்கு முந்தவேண்டும் என்ற பரபரப்பில் அர்த்தெமிதோரஸ் முன்கூட்டியே ஸீஸரை நோக்கி, “ஆண்டகையீர்! என் கடிதம் தம்மையே குறிப்பது; மிகவும் விரைவில் அறியவேண்டுவது; அதனை முந்திப் பெற்றருள்க,” என்றான்.

ஊழ்வினை முந்துறுத்தலின் ஸீஸர் இதனையும் தன் பெருந் தன்மையைக் காட்டுமிடமெனக்கருதி, “எம்மைக் குறிப்பதை யாம் இறுதியிற் பார்ப்போம்" என்று கூறி அவனைக் கடைசியிற் போகும்படி கூறிவிட்டான். அவன் விதிக்கேற்ப அன்று அவனது நன்மதியே அவனுக்குத் தீமதியாமைந்தது.

தற்குள் அந்தோணி, ஸீஸருடைய இணைபிரியா நண்பனாதலால், திரெபோனியஸ் முன் கருத்துடனே அவனைத் தக்க சாக்குக்கூறி அவ்விடம் விட்டு அகற்றிக் கொண்டு போய் விட்டான்.

கிளர்ச்சிக்காரரனைவரும் முன்னமே வந்து ஸீஸரைச் சுற்றி நாற்புறமும் கூடியிருந்தனர்.

மெதெல்லஸ் ஸிம்பர் தன் குறையைக் கூறத் தொடங்கியதே அவன் வழக்கின்னதென அறிந்த ஸீஸர் அவனை நோக்கி, "வேண்டா, வேண்டா; நீ கேட்க வேண்டுவதில்லை உன் வேண்டுகோள் செல்லாது,” என்றான்.

“கெஞ்சுதலாலும் பல்லிளித்தலாலும் ஸீஸர் போன்றவர் களை அசைத்துவிட முடியாது. பிற விண்மீன்கள் தன்னைச் சுற்றினும் தான் சுழலாது நிற்கும் வட (துருவ) மீனை ஒத்த உறுதியுடையவன் அவன்,” என்ற இறுமாப்பு மொழிகள் ஸீஸர் நாவினின்று அப்போது எழுந்தன.

"

அவ்வேண்டுகோளுக்குத் தாமும் வந்து துணைதருபவர் போலக் காஸியஸும், புரூட்டஸும் சற்று நெருங்கி முன்வந்தனர். அப்போது எவ்வகை ஐயமும் இன்றி அவன், “புரூட்டஸ்கூடஇச்சிறு செய்திக்குத் துணையா? ஆயினும் என்ன? நடுநெறி பிறழாத ஸீஸர் தீமையைச் செய்வதுமில்லை; செய்தபின், பின்வாங்குவதும் இல்லை. அவன் செய்தது செய்ததுதான். ஆளுக்காக அது மாறுவதில்லை; உயர்குணமுடைய புரூட்டஸ் சொல்கூட அவன்முன் வந்து பயனற்றுப்போவது பற்றி வருந்துகிறேன்,” என்றான்.