பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

21

கண்டு இன்னும் யார் யார் உயிர்க்கு இடையூறு வருமோ என்று அஞ்சி மூலைக்கொருவராக ஓடிவிட்டனர்.

அதுகண்டு புரூட்டஸ், தம் நண்பர்களை நகரெங்கும் அவ்வுடை வாள்களைச் சுழற்றிக்கொண்டு, “ஸீஸர் வீழ்க. கொடுங்கோலன் வீழ்க, வீழ்க. ரோம் வாழ்க!" என்று கூவி மக்களை ஊக்கும்படி அனுப்பினான்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். "ரோம் வாழ்க; புரூட்டஸ் வாழ்க; விடுதலை வாழ்க!" என்று அவர்கள் எங்கும் தொண்டைக் கிழியக் கூவிக்கொண்டு திரிந்தனர்.

ஆனால், நகரின் பரபரப்பு இதனால் இன்னும் மிகுந்ததே தவிரவேறன்று. உருவிய உடைவாள்களைக் கண்டஞ்சி ஓடி ஒளிந்தபேர் பலர் கலவரத்தை மிகுதிப்படுத்தினர். முந்தின நாளே தீக்குறிகளைக் கண்டு அஞ்சிய நகரம். இன்று நிலை கொள்ளாது அல்லோல கல்லோலப்பட்டுக் குழப்பமுற்றது.

திரெபோனியஸுடன் வெளியே சென்றிருந்த மார்க்ஸ் அந்தோணி நகரின் குழப்பத்தைக் கண்டு நடந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனே தன்னையுங் கட்டாயங் கொல்வர்; அதற்குள் தானே நகரைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று விரைந்தான்.

ஆனால்,இம்முயற்சியிலீடுபட்டுத் தலைமைதாங்கியிருப்பவன் புரூட்டஸ் என்பதைக் கேள்வியுற்றதும், கணவன் இறந்தது கேட்டு உயிர்த்துறக்க எண்ணிய கற்புடை மனைவி,அவள் கைக் குழவியைக் கண்டு எண்ணம் மாறுவதுபோல, “ஆ, அப்படியானால் இனிப்பழி வாங்கும் வாய்ப்பு உள்ளது," என்று கருதித் தன் வீட்டுக்குச் சன்று ஒளிந்துகொண்டு, நம்பகமான ஒரு பணியாளின் வாயிலாக, “ஸீஸர் கொலையுண்டதன் காரணம் அந்தோணிக்குத் தெரியும். நண்பன் என்ற முறையில் ஸீஸர் உடம்பை அடக்கஞ்செய்ய மட்டும் அவன் விரும்புகிறான். புரூட்டஸின் திருவுளமறியக் காத்திருக்கிறான்,” என்று எழுதிய ஒரு கடிதத்தை புரூட்டஸுக்கு அனுப்பினான்.

66

காஸியஸ், புரூட்டஸினிடம், “அந்தோணி பசுப்போலிருந்து புலிபோற் பாயும் இயல்பினன். அவனுக்கு இடந்தரவேண்டா,” என்று வற்புறுத்தினான். புரூட்டஸ், “காஸியஸ்! நீ ஏன் இங்ஙனம்