பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம்

எதைக் கண்டாலும் அஞ்சுகிறாய். அவன் நம்மிடம் வேறெதுவுங் கேட்கவில்லையே! ஸீஸர் உடலை அடக்கம் செய்யத்தானே உரிமை கேட்கறான். ஸீஸரது செத்த உடலுமா நமக்குப் பகை?” என்று கூறிவிட்டு, “அந்தோணி உடலை அடக்கஞ் செய்ய வரலாம்," என்று பணியாளனிடம் சொல்லியனுப்பினான்.

புரூட்டஸின் இணக்கத்தை அறிந்ததே திகிலும் இருளுஞ் சூழ்ந்து வாடிய அந்தோணியின் முகம், கதிரவனைக்கண்ட தாமரை என அலர்ந்தது. அதுமுதல் அவன் உடலில்ஸீஸரின் உயிரே புகுந்த தென்னலாம்.

ஸீஸரின் பக்கத்தில் ஒரு விளையாட்டுக் கருவிபோன்று ஓடியாடிய அவ்விளைஞன், அதுமுதல் மக்களுடைய மனத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டு அவர்களைத் தான் நினைத்தபடி ஆட்டும் மந்திரவாதியானான்.

அவன் வந்ததும் என்ன செய்வானோ என்ற கவலையுடன் அவனை எதிர்பார்த்து நின்றனர் கிளர்ச்சிக்காரர். ஆனால் அவன் அவர்களையோ, புரூட்டஸையோ கூட எதிர்பார்த்ததாகக் காணவில்லை. தாயை இழந்த கன்றே போல் அவன் நேராக ஸீஸர் உடல்கிடந்த இடஞ்சென்று அவ்வுடலை மூடிய திரையை நீக்கிவிட்டுக்கோவெனக்கதறி அழுதான். இங்ஙனங் கால்நாழிகை சென்றபின் கண்களைத் துடைத்துக்கொண்டு, சரேலென்று கிளர்ச்சிக்காரர் முன் வந்துநின்று, தனது மேலுடையை அகற்றி உச்சட்டையையும் திறந்து நெஞ்சைக் காட்டிக்கொண்டு, "ஐயன்மீர்! ஸீஸரின் குருதியால் உங்கள் உடைவாளின் விடாய் தீரவில்லையாயின், என் நெஞ்சையும் பிளந்து கொள்க. அவனிடம் நட்புக்கொண்ட பழி எனக்கும் உண்டு. அவனுட ன் சாவதைவிட உயர்ந்த பேறு எனக்கு வேறில்லை,” என்றான்.

66

அவனுடைய கண்கள் அப்போது கலங்கிக் கொவ்வைப் பழங்கள் போற் சிவந்திருந்தன. அவன் உதடுகள் துடித்தன.

அவனது நடிப்பை மிகவும் வெறுத்த காஸியஸும் கிளர்ச்சிக்காரர் பிறருங்கூட அப்போது அவனிடம் கனிவு கொண்டனர். உண்மையும் அன்புமே உருவெடுத்து வந்த புரூட்டஸைப் பற்றியோ கேட்க வேண்டுவதில்லை. அவன் நீர் ததும்பிய கண்களுடன், “என் அரிய உடன் பிறப்பாள! ஸீஸரை நேசிப்பது ஒரு பழியாயின், அதில் உன்னைப்போல் எனக்கும் ஒரு