பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

23

பங்கு உண்டு. நாங்கள் ஸீஸரைப் பகைக்கவில்லை. அவன் ஆட்சி முறையையே பகைத்து, அதனுடன் இரண்டற்று நின்ற அவனையும் கொல்ல நேர்ந்தது. உன்னிடம் எங்களுக்கு எவ்வகைப் பகையும் இல்லை,” என்றான்.

காஸியஸ் இப்போது இடையில் வந்து, “அது மட்டுமன்று அந்தோணி, உனது நட்பையும் நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். நீ எங்களுடன் சேரின் உன் விருப்பங்களுக்கு முழு மதிப்புத் தருவோம் என்பதை நீ உறுதியாக நம்பலாம்," என்றான். அந்தோணி காஸியஸ் பேச்சை முறித்து, "ஐய, ஸீஸரது அடிச்சுவட்டில் மிதித்து நிற்குந். தகுதியுடையர் குழுவிற் சேரும் பெருமை எனக்கு வேண்டா. அவன் நண்பன், அவனுக்காக அழுகின்ற உரிமை கொண்ட நண்பன் என்பதே என் நிலை. ஆனால் நான் உங்களுக்கும் நண்பனே,” என்று கூறி அவர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிக் கொண்டான்.

அந்தோணி பின்னும் ஸீஸர் பக்கம் சென்று உரக்க, “ஆ புல்வாய்களுக்கு இரையாகிய கலையரசே போல் விழுந்து கிடக்கும் என் தலைவனே! நீ கிடக்கும் நிலை காணப்பொறுக்க முடிய வில்லையே! ஆ! நின் குருதியில் தோய்ந்து நின்னை வேட்டையாடிக் கொன்ற 'மன்ன'ரிடையே நீ கிடக்குங் கிடை என்று கண்ணீர் வடித்தான்.

அந்தோணி தம்மை மறைமுகமாகக் குறை கூறுகின்றான் என்பதைக் கண்டுகாண்ட காஸியஸ் அவனைத் தடுத்து, “நாங்கள் இடந்தருமுன் உன் நிலையை அறிய விரும்புகிறோம். நீ எங்களுடன் சேர்கிறாயா? அல்லது தனித்து நிற்கிறாயா?” என்று கேட்டான்.

அந்தோணி புரூட்டஸ் பக்கமாகப் பார்த்து, “நண்பர் என்றுதான் உங்களை அண்டினேன். நண்பர் என்றுதான் உங்களுடன் கைகுலுக்கினேன். ஆனால் உங்களுடன் ஒருவனாக நான் இருப்பதெப்படி? ஸீஸரின் உடலை அடக்கஞ்செய்து என் நட்புக்கடனாற்றுவதைத் தவிர வேறெவ்வகையிலும் நான் உங்கள் வழிக்கு வாரேன்,” என்றான்.

வழக்கம்போலவே காஸியஸின் தடங்கலைப் பொருட் படுத்தாமல் புரூட்டஸ் அவனுக்கு அக்கடனாற்ற இணக்கந்