பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

அகற்றினோம். இனி நீங்களே ஆட்சி புரிக. கூட்டம்: ஆம்; ஆம்.

சிலர்: இனி நீரே தலைவர். நீரே ஸீஸர்.

25

இன்னும் சிலர்: உம்மையே இனி அரசராக முடிசூட்டுவோம். புரூட்டஸ் கூட்டத்தின் பொருந்தா உரைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்களை விட்டு அகன்றான்.

நூலறிவும் ஆராய்ச்சியும் நிரம்பி உலக அறிவுக் கிடமில்லாத அவன் மனத்தில் ரோமப் பொதுமக்களின் அறியாமையோ, பெருமக்களின் தன்னலமோ தென்படவில்லை. அவற்றை அறிந்து நடத்தும் ஆற்றல் வாய்ந்த காஸியஸுக்குத் தான் செய்யுங் தீங்கையும் அவன் உணரவில்லை.

புரூட்டஸ் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்தோணி ஸீஸருடன் பக்கம்சென்று அதனை வணங்கி, “எம் அரசே! உமது உடலின் நிலை கண்டும் உம்மைக் கொன்ற கொலைகாரப் பாதகர்கள் நின்ற நிலை கண்டும், சீற்றத்தை உள்ளடக்க அவர்களுடன் நகைத்துக் கை குலுக்கும் எனது சிறுமையை மன்னித்தருள்க” என்று கூறிக்கொண்டே அவ்வுடம்பின் இறுதிப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான்.

பின், சில பணியாள ருதவியுடன் அவ்வுடம்பைத் தானும் தாங்கிக் எடுத்துக்கொண்டு புரூட்டஸ் பேசிக் கொண்டிருந்த இடத்தினருகில் வைத்துவிட்டு, மேடையினின்று இறங்கிவரும் புரூட்டஸை வணங்கித் தழுவிக்கொண்டு அந்தோணி மேடையேறினான்.

சிறந்த நாடகக்காரன் போலத் தன் நிலை, தன் மாற்றார் நிலை, தன்முன் நிற்கும் மக்கள் நிலை என்னும் மூன்றையும் நன்றிந்து அவற்றிற் கேற்பப் பேசி, அவன் மக்கள் மனத்தைப் படிப்படியாகத் தன் பக்கம் திருப்பத் தொடங்கினான்.

முதலில் அவன்தான் புரூட்டஸின் நண்பன்! காஸியஸின் நண்பன்; அவர்கள் கூட்டத்தாரின் நண்பன் என்பதனை வற்புறுத்தி அவர்கள் உயர்வையும், ஸீஸர் இறுதிக்கடனை ஆற்றத் தனக்கு உரிமை கொடுத்த அவர்கள் பெருந்தன்மையினையும் புகழ்ந்து, அதன்பின் இவர்கள் இணக்கத்- தால் தான் எடுத்துக் கொண்ட