பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம்

கடமைஸீஸரைப் புகழ்வதன்று; ஸீஸரின் இறுதிக்கடனாற்றுவதே என்றும் முன்னுரையாகக் கூறிவிட்டு, நேரடியாக ஸீஸரைப் பற்றிப் பேசத் தொடங்கினான்.

அந்தோணி: “ஒருவர் செய்த நன்மையை மறைப்பது எளிது; அவர் செய்த தீமையை மறப்பது எளிதன்று.

“ஸீஸர் தான் செய்த தீமையினாலேயே இறந்திருக்க வேண்டும்.

“அவன் செய்த தீமை என்ன?

“புரூட்டஸ் கருத்துப்படி அவன் பேராவல் உடையவன் என்று சொல்லப்படுகிறது. (புரூட்டஸ் சொல்வது சரியே. அது தப்பாயிருக்க முடியாது. புரூட்டஸ் போன்ற அறிவாளிகள், காஸியஸ், காஸ்கா போன்ற அறிவாளிகள் சொல்வது தப்பாயிருக்கமுடியாது.) ஸீஸர் என் நண்பன்; என்னிடம் மாறா உறுதியுடையவன்; ஆனாலும் அவன் பேராவலுடையான் என்பதில் ஐயமில்லை.

"அவன் பேராவல் கொண்டது எதில்? “அவன் பெரிய போர்வீரன். அவன் வென்ற அரசர்கள் உங்கள்முன் ஊர்வலமாகச் சென்றதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவன் கொண்டுவந்த திறைகளால் உங்கள் கருவூலம் நிறைந்தது. உங்கள் கைகளும் நிறைந்துள்ளன. ஆயினும் அவன் பேராவலுடையவனே. இவ்வெற்றிகளால், இம்மன்னர் திறைகளால் அவன் மனம் நிறைவடைய வில்லையன்றோ?

“அவன் பேராவல் இதனுடன் நின்றதா? நாள் விழாவன்று அவனுக்கு மணிமுடியும், அரசிருக்கையும் வழங்கினேனே! அவன் அதனை ஏற்றானா? இல்லை. மும்முறை மறுத்தான் என்பதை நீங்களே அறிவீர்கள். ஏன்? அவனுக்கு அந்த மணிமுடியை நான் கொடுத்தது போதவில்லை. உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உங்கள் அன்பாகிய ஒரு மணிமுடியையும் பெற எண்ணினான். இது பேராவலன்றோ?”

இங்ஙனம் ஸீஸரைப்

பழிப்பதுபோல அவனது பெருமையையே கூறிப் பின்னும், ஏழைகளிடம் அவன் கொண்ட கருணையையும், பொதுமக்கள் அவன் வெற்றிகள் அடைந்த