பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

27

போதும் கொடைகள் அளித்த போதும் அவனை ஆரவாரத் துடன் புகழ்ந்த புகழையும் எடுத்துக் காட்டினான்.

“நீங்கள் அனைவரும் அவன் காலடிகளைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஒருநாள் இருந்ததன்றோ?

“அவன்மீது எறிந்த செண்டுகூட உங்கள்மீது முள்ளாகத் தைத்த காலம் ஒன்றிருந்ததன்றோ? அன்று அவன்மீது உங்களுக்கு அன்பு இருந்தது. இன்று அவன் இறந்தவுடன் உங்கள் அன்பு எங்கே போயிற்று? உங்கள் அன்பும் அவனுடன் போய்விடவா செய்தது? நம் நண்பர் இறந்தால், நம் வீட்டில் ஓர் அடிமை இறந்தால்-ஒரு மாடு இறந்தால்ட நம் கண்ணில் நீர் வருகின்றதே! நம்மைப்போன்ற ஒரு மனிதன் அதுவும் அரசனுக்கு ஒப்பானவன்; ஒப்பற்ற வீரன்; பெருந்தன்மையானவன்; உங்களுக்காகவே வாழ்ந்தவன்; உங்களை- யன்றித் தனக்கெனப் பொருள் தேடாதவன். அப்பேர்ப்பட்ட ஸீஸர் இறந்து போதுமட்டும் உங்கள் கண்ணில் நீர் வராததேன்?

"நீங்கள் அறிவற்றவர்களா? இல்லை; பின் ஏன் ஸீஸரின் பெருமையை எண்ணிப் பார்ப்பதில்லை?

“நீங்கள் அன்பற்றவர்களா? இல்லை; பின் ஏன் உங்கள் தாய்போன்ற, உங்கள் உயிர்போன்ற ஸீஸர் இறந்தபோது உங்கள் கண்கள் கனியவில்லை.

“உங்கள் கண்களை, உங்கள் உள்ளங்களை மறைப்பது எது? அடக் கடவுளே! நீ கொடுத்த அறிவை, நீ கொடுத்த அன்பை இந்த மக்கள் ஏன் பயன்படுத்தமாட்டேன் என்கிறார்கள்?”

என்று கூறி மீண்டும் ஸீஸரின் உடலின் மீது விழுந்து அழுதான்.

“ஏட்டுச் சுரைக்காய் போன்ற புரூட்டஸின் மொழிகள் எங்கே? பொறி புலன்கள் அத்தனையும் வசப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் இம்மாயாவி எங்கே? புரூட்டஸின் சொற்கேட்டு நாவைப் பறிகொடுத்து நின்றவர்கூட இப்போது உள்ளத்தையும் உணர்வையும் பறிகொடுத்து உயிரையும் ஸீஸரின் புதிய புகழுடம்பிற்காகப் பறிகொடுக்க முன்வந்தனர்.”

வ்வளவும் போதாதென்று அவன் இதுவரையிற் காட்டாது வைத்திருந்த கடைசித் துருப்பு ஒன்றை