பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம்

கிளர்ச்சிக்காரர் காட்டிய இராவணக் கோட்டையை அழிக்கத் தகுந்த இறுதி “இராமபாணத்தை” எடுத்து வீசினான்.

'இதுவரையிலும் நான் கூறிது கேட்டே நீங்கள் கண்கலங்கு கிறீர்கள்; உங்களை அறியாமல் உங்கள் கண்கள் அழுகின்றன; ஆனால் அவற்றின் காரணத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்?

“நீங்கள் அவனுக்காக இப்போதுகூடப் பதைபதைக்கிறீர்கள். அவனுக்கு நேர்ந்த தீங்குக்காக அதற்கு விடை தருவதற்காக உங்கள் உள்ளம் துடிக்கிறது. ஆனால் அவ்வளவு அன்பு உங்கள் உள்ளத்தில் எழுவானேன்?

66

"உண்மையில் உங்கள் அன்பு காரணமற்றதன்று. அவன் உங்களுக்காகவே பொருள் தேடினான் என்பதையே ‘சேய் - நலனை நாடி உயிர் விடுந் தாய்போல் உயிர்விட்டான்' என்பதை நான் உங்களுக்குக் காட்ட முடியும்.

"ஆனால் ஏற்கனவே நீங்கள் அழுகிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் அவனைக் கொன்ற கொலைஞர்மீது, பகைவர்மீது சீற்றமடைந்திருக்கிறீர்கள். அவன் கடைசியாக உங்களுக்கும் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கைகொட்டும் உங்களுக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் தன்னை வென்றவருடன் கைகுலுக்கும் எனக்கும் வைத்துவிட்டுப் போன உடைமையை நீங்கள் அறிந்துவிட்டால், தலைகால் தெரியாது சாடிவிடுவீர்கள்! பெரியோர்களான எனக்குப் பேச இணக்கம் தந்தவர்களான புரூட்டஸ் முதலியோர்களுக்கு நான் கொடுத்த உறுதியை நீங்கள் குலைத்துவிடுவீர்கள்,” என்று துணிகரமாய்க் கூறினான்.

பொதுமக்கள் இது கேட்டு வியப்பும் எழுச்சியுங்கொண்டு, ‘அதைக் கூறுக, கூறுக' என்று துடித்த உள்ளத்துடன் கூவிக் கேட்டனர்.அந்தோணி வேண்டா வெறுப்பாகக் கூறுபவன்போல் ஸீஸர் தான் இறந்தபின் குடிகள் தனது பொருட்குவை முற்றும் அடையவேண்டுமென்றும், தன் வீடு தோட்ட முதலியவற்றைப் பொதுவிடமாகக் கொள்ளவேண்டுமென்றும் எழுதியிருப்பதை அறிவித்ததோடு அவ்வப்போது ஸீஸரது உடலிற்பட்ட படுகாயங்களையும், அவன் கொலையுண்ட வகையையும், கொலை செய்தோரையும் உருக்கிவிட்ட இருப்புப் பிழம்புப் போன்ற அனல் மொழிகளால் இயைபுடுத்தி அவர்கள் மனக்கண்முன் உயிர்