பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

29

ஓவியமென ஸீஸர் கொலையின் கொடுமையினை வரைந்து காட் டினான். இறுதியில் எல்லா நடிப்பையுந் துறந்து, அவர்கள் கிளர்ச்சிக்காரருடைய வீடுகளை எரித்து அவர்களையும் அவர்கள் நண்பர்களையும் உயிருடன் பொசுக்கி, ஸீஸர் கொலைக்குப் பழி வாங்குமாறு உறுதியாய்த் தூண்டினான்.

6. மறைந்து நின்றழிக்கும் பழி

"

"பாம்பறியும் பாம்பின் கால்," என்றபடி அந்தோணியின் உட்கருத்தையும் ரோமின் பொதுமக்கள் நிலையையும் அறிந்து, வரப்போகும் புயலை முன்கூட்டி உணர்ந்த காஸியஸ், புரூட்டஸை எதிர்பாராமலே அவனையுங்கூட அவன் விருப்பத்திற் கெதிராகச் சேர்த்துக்கொண்டு நகரைவிட்டு வெளியேற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தான். அதனால் அந்தோணியின் தலைமையிற் பொதுமக்கள் புயல்காற்றுப் பட்ட காட்டுத்தீயெனச் சீறிக் கொண்டும் தன்னகத்துள்ள எரிமலையின் எழுச்சியால் கொந்தளிக்குங் கடல் போலக் கொந்தளித்துக் கொண்டும் வருவதை அறிந்ததுமே, அவர்கள் ஓடி நெடுந்தொலைவு சென்று, ‘ஆந்தியம்' என்னுமிடத்தில் தங்கித் தம்மைப் போருக்குச் சித்தமாக்கிக் கொண்டனர்.

அதுமுதல் ரோம் நகர் மீகாமன் இல்லா மரக்கலம் போல் ஒழுங்கான அரசியலின்றிக் குழப்பத்துள்ளும் உள்நாட்டு சண்டையுள்ளும் ஆழ்ந்தது.பொதுமக்கள் அனைவரும் அந்தோணி பக்கமே நின்றனர் ஆயினும் பொதுமக்களும் அவர்கள் கைப்பட்ட படையும் கிளர்ச்சிக்காரர் பக்கம் நின்று அவர்கள் கட்சியை வலுப்படுத்தினர். பொதுமக்கள் ஆற்றலாற் கிளர்ச்சிக்காரர் நகரத்துட்புக முடியவில்லையாயினும், படையில்லாமல் அந்தோணிக்குப் பேரரசைக் கைக்கொள்ளவும் முடியவில்லை.

இந்நிலையிற் கள்ளன் வீட்டிற் குள்ளன் புகுந்ததுபோல், அந்தோணிக்குப் போட்டியாக ஸீஸரின் மகனாகிய அக்டேவியஸ் என்னும் இளைஞன் தோன்றினான். இவன் ஸீஸரை ஒத்த வீரனல்லனெனினும், ஒப்பற்ற சூழ்ச்சித் திறனும் அமைந்த தோற்றமும் உடையவன். அந்தோணியின் துணையின்றிக் கிளர்ச்சிக் காரரை வெல்ல முடியாதாதலால் அவன் அந்தோணியினிடம் மிகுந்த பற்றுடையவன்போல் நடித்து