பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம்

அவனை வசப்படுத்திக்கொண்டான். ஆனால் அந்தோணி படையில்லாமற் பொது மக்களையே நம்பியது சரியன்றெனக் கருதிக் கொஞ்சங் கொஞ்சமாக ஒரு சிறிய படையைத் திரட்டினான்.

மேலும் கிளர்ச்சிக்காரரிடமிருந்து பெருமக்கள் துணையைப் பிரிக்கவும் படைப் பயிற்சிக்கான பணம் பெறவும் அவன் ன் னொரு சூழ்ச்சியுஞ் செய்தான்.கிளர்ச்சிக்காரருடன் சேராமல் நின்ற பெருமகனும், பெருஞ் செல்வனுமான 19லெப்பிதஸ் என்பவனை அந்தோணிக்குப் போட்டியாகக் கிளறிவிட்டு அவனிடமிருந்து பணமும், பெருமக்கள் துணையும் பெற்றதன்றி அவன் வாயிலாக அந்தோணியின் செல்வாக்கையும் மட்டுப்படுத்தினான். மேலும் அவ்அக்டேவியஸ் நாளடைவில் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைக்கும்படி தூண்டி அவர்களை அழிக்கும் எண்ணமுடையவனாயினும், கிளர்ச்சிக்காரர் அழியும்வரை அவர்கள் துணையைப் பெற எண்ணி அவர்களுடன் பேரரசை ஆளும் உரிமையைப் பங்கு கொள்வதாகப் பேசி ‘மூவர் உடன்படிக்கை', ஒன்றை ஏற்படுத்திக் கொண்டான்.

மூவர்படை ஒருபுறமும் கிளர்ச்சிக்காரர் படை ஒருபுறமுமாக இரண்டும் ஓயாத சண்டைகளில் ஈடுபட்டன. ஆனால் உண்மையில் மூவரிடையே ஒற்றுமையில்லை; அதுபோலவே கிளர்ச்சிக்காரரிடையிலும் ஒற்றுமையில்லை. காஸியஸின் சூழ்ச்சிகளும், வருவாய்க்காக ஏழை மக்களை அவன் கசக்குவதும் புரூட்டஸுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாகப் புரூட்டஸுக்குச் செலவு செய்யும் வழியின்றிப் பொருள் வருவாய்க்கான வழி தெரியாதாகையால் அவன் காஸியஸினிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தான். இப்படி ஒழுங்கு முறைகள் பேசித் தன் வருவாயை ஒரு பக்கம் கெடுப்பதன்றி அடிக்கடி செலவையும் உண்டு பண்ணும் புரூட்டஸின்மீது காஸியஸ் சீறி விழுந்தான். நாளடைவில் இருவரும் கீரியும் பாம்பும் போலாயினர்.

இவ்வொற்றுமைக் கேட்டால் அக்டேவியஸ் படிப்படி யாகத் தன் கட்சியையும் தன்னையும் வலுப்படுத்துவது கண்டு, காஸியஸ் புரூட்டஸுடன ஒத்துப் போக எண்ணி, அவனை நட்பு முறையிற் காணவிரும்பினான். இருவரும் தம் படைகளுக்கு