பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

31

அமைதியாயிருக்க ஆணை கொடுத்துவிட்டுத் தம் படைவீட்டிற் கலந்து நட்பாடலாயினர். அப்போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுத் தம் குறைகளைக் கூறிக்கொண்டனர்.

காஸியஸின் இடர்களையும், அவனுக்குத் தான் அறியாது காடுத்த துயரையும் எண்ணிப் புரூட்டஸ் வருந்தியதோடு தான் அவனுடன் பொறுமையிழந்து சீறியதற்காக மன்னிப்புங் கேட்டுக்கொண்டான். மேலும், தான் பொறுமை யிழந்ததற்கு ஒரு காரணமும் உண்டெனக் கூறித் தன் மனைவி போர்ஷியா தன் கட்சியின் தோல்வியையும், தன் துன்பங்களையும் கேட்டுத் தாங்க முடியாது இறந்ததையும், அதுமுதல் தான் தோற்றத்தில் மனிதனா யிருந்தும் உண்மையிற் பேயாகவே நடந்து வருவதையுங் கூறினான்.

அது கேட்டுக் காஸியஸும் கண் கலங்கினான். புரூட்டஸ் தன்னை அறியாவிடினும் தான் புரூட்டஸையும் அவன் உயர்வையும் அறிந்திருந்ததனால் அவனிடம் நாம் பொறுமை காட்டினோ மில்லையே என்று எண்ணிக் காஸியஸ் மனமுருகினான்.

இப்போது காஸியஸ் மனத்தில் தன் கட்சி தோற்றத்தைப் பற்றிய எண்ணமேயில்லை. விரைவில் அவன் இறக்கப் போவதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அதைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை. புரூட்டஸின் உயர்வு ஒன்றே அவன் கண்முன் நின்றது.அவன் குற்றங்கள் மனிதன் குற்றம் உலகையறியா மனிதன் குற்றம்; அவன் பெருமையோ கடவுள் பெருமை கடவுட் தன்மை மிக்க பெருமை. அதனைக் கண்டறிந்தபின் தன் வாழ்வின் பயன் நிறைவேறியதாகவே காஸியஸ் கருதினான். இனி அவன் இறக்க அஞ்சவில்லை. பழைய தன்னலத்தின் நிழல். அழுக்காற்றின் நிழல் இன்று பொசுக்கப்பட்டு விட்டது. அவனது உலகியல் அறிவோ புரூட்டஸின் புகழொளிக்கு நெய்யாகப் பயன்பட்டது.

மறுநாள், மூவருள் முதல்வனான-நாளடைவில் மற்ற இருவரையும் விழுங்கிப் பேரரசின் முழு முதல்வனாய் விளங்கிய- அக்டேவியல் ஸீஸரது படை ஒருபுறமும், காஸியஸ், புரூட்டஸ் என்னும் இருவர் படைகளும் மறுபுறமுமாகக் கைகலக்கும் நாள், காஸியஸ் அன்று அவன் படைவீட்டுக்குச் சென்றுவிட்டான்.