பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம்

புரூட்டஸுக்குக் கண்கள் ஒரு நொடிகூடத் துயிலில் நிலைக்கவில்லை. போர்ஷியாவின் எண்ணங்களைத் துரத்திக் கொண்டு அன்றிரவு ஸீஸர் நினைவும்-அவன் இறந்தபோது அவன் தோன்றிய தோற்றமும், அவன் கூறிய பொன் மொழிகளும் - 'புரூட்டஸ், நீயுமா' என்ற வன்மொழியும் அப்படியே அவனுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்வனவாகத் தோன்றின.

ஸீஸரின் உயர்வு அன்றுதான் அவனுக்கு நன்கு தென்பட்டது. அவன் குற்றம் உண்மையில் அவன் குற்றமன்று; பொதுமக்கள் குற்றம்தான். அவனைக் கொன்றது ஏன்? இப்போது விளங்குகின்றது. கிளர்ச்சிக்காரர் அவனைக் கொன்றது விடுதலை வேட்டைக்காக அன்று. காஸியஸ்கூட, ஆம், காஸியஸ் கூடத் தன்னலத்தைச் சாராதவன் அல்லன். ஆனால் புரூட்டஸ் மனத்தல், அவன்மேற் சீற்றமில்லை. அவன் சிறு பிழைக்கு அவன்தன் அறியாமையாற் பட்ட தீமை போதும் என்று எண்ணினான்.

ஆனால் மன்னிக்க முடியாத குற்றம் தன்னுடையதே. ரோமின் பேரொளியை - ஆம், தன் மொழிப்படியேகூட, உலகின் பேரொளியை - தன் அறியாமையால் அழித்துத் தன்னையுங் கெடுத்துத், தன் மனைவியையுங் கொன்று, தன் நண்பர்களையுந் தன் நாட்டு மக்களையுங் கெடுத்த பழி தன்னதே என்று அவன் கருதினான். அவன் மனம் கழிவிரக்கத்தாற் கலங்கிக் கண்ணீர் சிந்தியது.

அவன் அழுததால் துயின்றானோ, துயிலினால் அழுகை நின்றதோ கூறவியலாது. ஆனால் அவ்வரைத் துயிலில், காய்ந்ததும் முற்றிலுங் காயாத அக்கண்ணீர் வழியாக ஸீஸரின் உருவம் அவன் முன்வந்து நின்றது. அவன் உடல் மயிர்க்கூச் செறிந்தது. அவன் கை கால்கள் நடுங்கின. ஆனால் அவன் உள்ளம் நடுங்கவில்லை. 'எல்லாம் என் குற்றம், என் குற்றம்' என்றான் அவன்.

ஸீஸர் உரு ‘ஆம். நாளை உனக்கும் உன் நண்பர்களுக்கும் இறுதிநாள். என் பழியை நீங்கள் அடைவீர்கள்,' என்றறிவித்தது.

மறுநாள் '20பிலிப்பி' என்ற இடத்தில் நடந்த போரிற் கிளர்ச்சிக்காரர் படை நிலைகுலைந்தழிந்தது. கிளர்ச்சிக்காரர்